68-வது தேசிய திரைப்பட விழா: குடும்பத்தினருடன் கிளம்பிய சூர்யா

68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறவுள்ளது.இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார்.
சூர்யா
சூர்யா
Published on

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com