மோஷன் போஸ்டர் ரிலீஸ்- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா 42 படக்குழு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.இப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சூர்யா
சூர்யா
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் உள்ளது என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

சூர்யா 42
சூர்யா 42

சூர்யா 42

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என்று குறிப்பிட்டு இப்படம் 3டி-யில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது என்றும் மோஷன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com