5 வித்தியாசமான கெட்டப்புகளில் கலக்க வரும் சூர்யா- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யா
சூர்யா
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42
சூர்யா 42

சூர்யா 42

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

சூர்யா 42
சூர்யா 42

சூர்யா 42

இந்நிலையில் சூர்யா இப்படத்தில் 5 கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பெயர்கள்தான் சூர்யா நடிக்கும் 5 கதாபாத்திரங்களின் பெயர் என கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com