search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stench"

    • நள்ளிரவு மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கடைசி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேஷ் இவர் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் விவசாயம் செய்யும் விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோழி கழிவுகளை கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த விவசாய கிணறு துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டது.

    அங்கு வசிக்கும் 15 குடும்பங்களுக்கு இந்த விவசாய கிணற்றில் இருந்து தான் குடிநீர் எடுத்துச் செல்லுகிறது வழக்கம். இதனால் பே்பகுதி மக்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,
    • அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு ஏராளமான மரங்களும், முட்புதர்களும் உள்ளன.இப்பகுதியில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூக்கில் தொங்கியவர் யார்? இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுனரா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பைக்காரா பகுதியில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது.
    • துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    பைக்காரா பகுதிகளில் வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல ஓடுவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 72-வது வார்டு பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற வழி இன்றி வீதிகளில் ஆறு போல ஓடி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். கடும் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வீதிகளின் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    72-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பைக்காரா கருப்புசாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் கவுன்சிலர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இது குறித்து கவுன்சிலர் கருப்புசாமி கூறியதாவது:-

    இந்த வார்டில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீதிகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. சாக்கடைகளில் மலம் உள்ளிட்ட கழிவுகளும் வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதிகளில் விரைந்து செய்து தர வேண்டும். பல்வேறு இடங்களில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது பரவலாக மழையும் பெய்து வருவதால் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கிராம மக்கள் ஒன்று கூடி சுமார் 2½ லட்சம் மீன் குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது.
    • அந்த ஏரியின் அருகாமையில் செல்லவும் முடியாமல் உள்ளது. பள்ளி -கல்லூரிகள் வரை இந்த துர்நாற்றம் வீசுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் சேலம்- சென்னை நெடுஞ்சாலையின் இடது புறமாக மணி விழுந்தான் ஏரி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் இந்த ஏரியின் பரப்பளவு உள்ளது. இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு காரணமாக சுற்றுவட்டார 30 கிராமங்களுக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் ஏரியில் அதிகப்படியாக நீர்வரத்து இருந்ததால் கிராம மக்கள் ஒன்று கூடி சுமார் 2½ லட்சம் மீன் குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது.

    இந்த நிலையில் ஏரியில் கடந்த 2 நாட்களாகவே 2½ லட்சம் மீன் குஞ்சுகள் திடீரென செத்து மிதக்கின்றன. அந்த ஏரிக்கு வரும் வசிஷ்ட நதி தண்ணீரில் கழிவு நீர் கலப்பதாலும், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலப்பதாலும், இந்த ஏரியில் உள்ள மீன் குஞ்சுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த ஏரியின் அருகாமையில் செல்லவும் முடியாமல் உள்ளது. பள்ளி -கல்லூரிகள் வரை இந்த துர்நாற்றம் வீசுகிறது.

    மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க பயன்படுத்த முடியாமலும், விவசாய நிலங்களுக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் கூறும் போது, மீன் குஞ்சுகள் இறந்து கிடப்பதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    மேலும் இந்த தண்ணீரை விவசாயத்திற்கும், ஆடு மாடுகளுக்கு குடிக்கவும் பயன்படுத்தாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதனால் இந்த நீரை அகற்றிவிட்டு, கழிவு நீரை வசிஷ்ட நதி ஆற்றில் கலக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    • சோழசிராமணியில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாக்கடையால் துர்நாற்றம் வீசிவருகிறது.
    • குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி மெயின் ரோட்டில் இருந்து காவிரி ஆற்று கரைக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாக்கடை கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை சரிவர செய்து முடிக்காததால் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசிவருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் சாக்கடை நீர் இறங்குவதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டி சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    • ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர்.
    • குளத்தில் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்தது மட்டுமல்லாமல் மூட்டையாக கழிவு பொருட்களை குளத்தில் போடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது இதில் 50க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர் நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டுஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் உள்ள குளங்கள் மீன் ஏலம் விடுவதற்கு உள்ள உரிமை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி ஆலயத்திற்கும்.குளம் ஏரிகள் ஆக்கிரமிக்க ப்பட்டால் அதை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினரிடமும் உள்ளது மேலும் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டால் அதை நகராட்சி நிர்வாகமும் சரி செய்கிறது

    இந்த நிலையில் வேதாரணியம் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் கடைவீதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளித்தின் நீரை பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து உள்ளது மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருட்களை குளத்தில் போட்டுவிடுகிறார்கள் இதனால் துர்வாடை வீசுகிறது இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது

    நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் சுற்றி உள்ள பகுதியில் இருந்து கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது ஒரு காலத்தில் புனித தீர்த்த குளமாக இருந்து இப்பொழுது கொசு உற்பத்தி மையமாக திகழ்கிறது.அறநிலைதுறை, வருவாய்துறை நகராட்சி என மூன்று நிர்வாகத்தில் உள்ள இந்த குளங்கள் பெரும்பாலும் தூய்மைபடுத்த படமால் உள்ளது தற்போது நகராட்சி நிர்வாகம் மக்கள்நலன்கருதி தூய்மைபடுத்த நினைத்தா லும் அறநிலைதுறையின் அனுமதி தேவைபடுகிறது இதனால் குளங்கள் பாரமரிப்பு இன்றி பல குளங்கள் சாக்கடைகளாக மாறிவருகிறது

    தற்போது மழைநீர்வடிய அரியாண்டி குட்டையில் ரூ.10 லட்சம் செலவில் வடிகால்வாய்க்கால் அமைத்துள்ளனர் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யமால் வடிகால் மட்டும் கட்டி எந்த பயனும் இல்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரியாண்டிகுளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×