search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீசுகிறது"

    • கிராம மக்கள் ஒன்று கூடி சுமார் 2½ லட்சம் மீன் குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது.
    • அந்த ஏரியின் அருகாமையில் செல்லவும் முடியாமல் உள்ளது. பள்ளி -கல்லூரிகள் வரை இந்த துர்நாற்றம் வீசுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் சேலம்- சென்னை நெடுஞ்சாலையின் இடது புறமாக மணி விழுந்தான் ஏரி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் இந்த ஏரியின் பரப்பளவு உள்ளது. இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு காரணமாக சுற்றுவட்டார 30 கிராமங்களுக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் ஏரியில் அதிகப்படியாக நீர்வரத்து இருந்ததால் கிராம மக்கள் ஒன்று கூடி சுமார் 2½ லட்சம் மீன் குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது.

    இந்த நிலையில் ஏரியில் கடந்த 2 நாட்களாகவே 2½ லட்சம் மீன் குஞ்சுகள் திடீரென செத்து மிதக்கின்றன. அந்த ஏரிக்கு வரும் வசிஷ்ட நதி தண்ணீரில் கழிவு நீர் கலப்பதாலும், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலப்பதாலும், இந்த ஏரியில் உள்ள மீன் குஞ்சுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த ஏரியின் அருகாமையில் செல்லவும் முடியாமல் உள்ளது. பள்ளி -கல்லூரிகள் வரை இந்த துர்நாற்றம் வீசுகிறது.

    மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க பயன்படுத்த முடியாமலும், விவசாய நிலங்களுக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் கூறும் போது, மீன் குஞ்சுகள் இறந்து கிடப்பதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    மேலும் இந்த தண்ணீரை விவசாயத்திற்கும், ஆடு மாடுகளுக்கு குடிக்கவும் பயன்படுத்தாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதனால் இந்த நீரை அகற்றிவிட்டு, கழிவு நீரை வசிஷ்ட நதி ஆற்றில் கலக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    ×