search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stealing"

    புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடையில் புகுந்து ஜவுளி வகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருமலை நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது28). இவர் புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் இளவரசன் ஜவுளிக்கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் இளவரசன் ஜவுளிக்கடையை திறந்து வியாபாரம் செய்ய வந்தார்.

    அப்போது ஜவுளிக்கடையில் ரூ.25 ஆ யிரம் மதிப்புள்ள பேண்ட், சர்ட் மற்றும் டிசர்ட்டுகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.1500 ரொக்க பணமும் காணவில்லை. இவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து இளவரசன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜவுளிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் ஜவுளிக்கடையையொட்டி உள்ள ஆலமரத்தின் வழியாக ஏறி ஷோரூம் கண்ணாடியை உடைத்து ஜவுளி வகைகளையும். பணத்தையும் திருடி சென்றிருப்பது பதிவாகி இருந்ததை கண்டனர்.

    இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை 2 வாலிபர்கள் ஒரு பெரிய துணி மூட்டையுடன் தலைச்சுமையாக ரெயில் நிலையம் நோக்கி வந்ததை ஓதியஞ்சாலை போலீசார் கண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த துணிமூட்டையை சோதனையிட்டனர். அதில் புத்தம் புதிய பேண்டு, சட்டைகள், டீசர்ட்டுகள் இருந்தது.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த ஜேவியர்அஜய் (21) மற்றும் பெஞ்சமின் ஜோசப்(18) என்பதும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவையில் நண்பரை காண வந்த இவர்கள் ஒரு ஓட்டலில் அறைஎடுத்து தங்கி பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மதுகுடித்த இவர்கள் குடிபோதையில் ஜவுளிக்கடையில் புகுந்து ஜவுளி மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜவுளி வகைகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    சின்ன சேலம் பூண்டி பஜனை மடத்தில் தங்க இழையிலான நடராஜர் ஓவியங்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்த போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    கும்பகோணம்:

    சேலம் மாவட்டம் சின்ன சேலம் பூண்டி பஜனை மடத்தில் தங்க இழையிலான பழமையான விலையுயர்ந்த 2 நடராஜர் ஒவியங்கள் கடந்த 2017 -ம் ஆண்டு திருட்டு போனது.

    இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திருடியவர்களை தேடிவந்தனர்.

    இந்த ஒவியங்களை திருடியது தொடர்பாக கடந்த 7-ந் தேதி, திருக்கோவிலூர் தங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆறுமுகம் (வயது32) என்பவரை கைது செய்தனர்.

    இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ஆறுமுகத்தை கடந்த 17 -ந் தேதி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேபட்டாம்பாக்கம், கக்கன் காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் முத்து கிருஷ்ணன் (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட முத்து கிருஷ்ணனை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முத்து கிருஷ்ணனை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 3 -ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் போலீஸ் காவலில் இருந்த ஆறுமுகத்தை காவல் விசாரணை முடிந்து நேற்று மாலை போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆறுமுகத்தை விசாரித்த நீதிபதி இன்று (20 -ந் தேதி) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். #tamilnews
    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலுடன் பைக்கிள் சென்று நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில் சாலையில் நடந்துச் செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றது.

    இது பற்றி போலீசாருக்கு நகை பறிக்கொடுத்தவர்கள் புகார் செய்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் இது போல நகையை பறி கொடுத்ததாக புகார் செய்ததால் நகை பறிக்கும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினார்கள்.

    புகார் கூறியவர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்களிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்கள் கவனத்தை திசை திருப்பி நகை பறித்து சென்றதாக கூறி இருந்தனர்.

    நகை பறிப்பு சம்பவங்கள் அனைத்தும் இதே போல நடைபெற்று இருந்ததால் ஒரே கும்பல் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

    அப்போது மாவேலிக்கரை பகுதியில் ஒரு கண்காணிப்பு காமிராவில் நகை திருட்டு காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது. வாகனத்தின் பதிவு எண் மூலம் போலீசார் விசாரணை நடத்திய போது அது போலி பதிவு எண் என்பது தெரிய வந்தது.

    இதனால் அந்த கும்பல் போலீசார் கைகளில் சிக்காமல் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தது. இந்த நிலையில் மாவேலிக்கரை கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த விஜூ(வயது33), மாவேலிக்கரைச் சேர்ந்த சுனிதா(36) என்பது தெரிய வந்தது.

    சுனிதாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவர் கூலி வேலைக்குச் சென்ற போது விஜூவுடன்பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவரை பிரிந்து விஜூவுடன் தனியாக வீடு எடுத்து அவர் வசித்து வந்தார். தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக அவர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சுனிதா வாகனத்தை ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்துச் செல்லும் விஜூ நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் அடிக்கடி தங்கள் வாகனத்தின் பதிவு எண்களையும், நிறத்தையும் மாற்றி கைவரிசையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. #tamilnews
    பூதப்பாண்டி அருகே வீட்டின் மேஜையை உடைத்து 3 செல்போன் திருடிய வாலிபரை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த இறச்சக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது53). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து வெளியேச் சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்து 3 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையன் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் மனோகரன் வீட்டில் செல்போன் திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னூரில் பட்டபகலில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). கைத்தறி தொழிலாளி.

    சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மகள் திருமண சம்பந்தமாக ஜோதிடரை பார்க்கச் சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த கனகராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த ஆரம், செயின் உள்பட 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கனகராஜ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். பட்டபகலில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    வெங்காயத்தை திருட வந்த 3 பேரை காவலுக்கு இருந்த இளைஞர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    துறையூர்:

    துறையூரை அடுத்த கீழகுன்னுபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகள் தோட்டங்களில் தாள் அகற்றுவதற்காக பட்டறை போட்டு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் தோட்டங்களில் இருந்த வெங்காய பட்டறைகளில் இருந்து வெங்காயம் திருடு போனது. இதையடுத்து வெங்காய பட்டறைகள் அமைக்கப்பட்ட தோட்டங்களில் இளைஞர்கள் இரவில் காவல் இருந்து வந்தனர். 

    இந்நிலையில் நேற்று இரவு கீழகுன்னு பட்டியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தோட்டத்தில் சரக்கு ஆட்டோவுடன் 3 மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் சரக்கு வாகனத்தில் வெங்காயத்தை ஏற்றினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் மர்மநபர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். 

    விசாரனையில் அவர்கள் சேலம் மாவட்டம் நாரை கிணறை சேர்ந்த அமல்ராஜ் (22) செம்பன் காட்டை சேர்ந்த வரதராஜ் (25) மற்றும் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  அவர்கள் கொண்டு வந்த சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×