search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competitions"

    • முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
    • குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,பல்லடம் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகள் 17.10.2022 அன்று முதல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    அதற்கான நிகழ்வு நிர்ணயக் கூட்டம் திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 45 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கண்காணிப்புக் குழுஉறுப்பினர்கள்,மற்றும் குறுவட்டப் போட்டிகளின் இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    • வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.
    • இதில் 49 பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.

    நாளை வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாணடுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 16 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

    போட்டியில் வட்டார அளவிலான 49 பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு 16 வகையான போட்டிகள் நடைபெற்றது.

    2-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

    போட்டிக்கான ஏற்பாடு களை மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை அமலா மற்றும் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

    • செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியினை செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் பேபி அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர். சோழன்குடிக்காடு ஆசிரியர்கள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார்

    புதுக்கோட்டை :

    கந்தர்வகோட்டை அருகே மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரன் வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.

    விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் மாலா, பள்ளி ஆசிரியர்கள் வெள்ளையம்மாள், சாந்தகுமாரி, தர்மா பாய், ராதா, இலக்கியா, குணசேகரன், ஓவியா பூபதி ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ×