என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் விளையாட்டு விழா
- குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார்
புதுக்கோட்டை :
கந்தர்வகோட்டை அருகே மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியர்பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரன் வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.
விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் மாலா, பள்ளி ஆசிரியர்கள் வெள்ளையம்மாள், சாந்தகுமாரி, தர்மா பாய், ராதா, இலக்கியா, குணசேகரன், ஓவியா பூபதி ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.






