விளையாட்டு போட்டிகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை

முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 
கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,பல்லடம் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

இந்தநிலையில் திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகள் 17.10.2022 அன்று முதல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

அதற்கான நிகழ்வு நிர்ணயக் கூட்டம் திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 45 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கண்காணிப்புக் குழுஉறுப்பினர்கள்,மற்றும் குறுவட்டப் போட்டிகளின் இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com