என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
- செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியினை செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் பேபி அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர். சோழன்குடிக்காடு ஆசிரியர்கள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story






