search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggling of ration rice"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் 26 மூட்டைகளில் இருந்த 1040 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் சுந்தரபாண்டியம் தேவர் சிலை அருகே சாக்கு மூடைகளுடன் நின்ற மினி லாரியை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமசாமியா புரத்தை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் சண்முகராஜ் (32), டிரைவர் திருப்பதி வெங்கடேஷ் (31), லோடுமேன் செல்வகுமார் ஆகியோரை தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் 26 மூட்டைகளில் இருந்த 1040 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    • பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    பந்தலூர் தாலுகா பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது.

    இந்த கடத்தல் மற்றும் மணல் கடத்தல்களை தடுக்கவும் பாட்டவயல், நம்பியார்குன்னு, மதுவந்தால், தாளூர், கக்குண்டி, பூலக்குன்று, கோட்டூர், மணல்வயல், சோலாடி, நாடுகாணி உள்பட பல பகுதிகளில் போலீஸ் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கடத்தல்களை தடுப்பது மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பந்தலூர் பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு காரை போலீசார் நிறுத்திய போது காரை ஓட்டிவந்த ஒருவர் காரைநிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை போட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மரக்காணத்தில் மினி லாரியில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • மினி லாரி ஒன்று நாகவாக்கம் பகுதியில் இருந்து ஈ.சி.ஆர். சாலைக்கு வந்துள்ளது .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நாகவாக்கம் பகுதியில் இருந்து மினி லாரி மூலம் ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது  இதனைப் பார்த்த அதிகாரிகள் இந்த மினி லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 50 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் (வயது 21) என்பதும் நாறவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து இந்த ரேசன் அரிசியை வாங்கி சென்று திண்டிவனத்திற்கு எடுத்து செல்லப்படுவதாக கூறியுள்ளார். இதனால் உணவுத்துறை அதிகாரிகள் வேன் மற்றும் அரிசி ஆகியவற்றை கைப்பற்றி மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து டிரைவர் அஜித்திடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்திக் கொண்டு வருவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் மற்றும்போலீசார் விரைந்துசென்றனர்.

    அப்போது வாகனத்தை மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்தவர் பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் குறிப்பிடத்தக்கதாகும். வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.

    • சோதனையில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
    • ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை பேருந்து நிறுத்தம் அருகே நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.அதனையடுத்து சரக்கு ஆட்டோவில் ரேசன் அரி சியை கடத்தி வந்த மோகனூர் தாலுகா, கீழ்பாலபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்‌ ரஞ்சித்குமார் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும், 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 ஆலைகளில் திடீர் சோதனை
    • கடத்தலில் ஈடுபட்ட 23 பேர் கைது

    வேலூர்:

    தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்துகின்றனர். அங்குள்ள அரசி ஆலைகளில் பாலீஷ் செய்யப்படும் அரிசி மீண்டும் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தையொட்டிய கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனுமதியுடன் பொது விநியோக திட்டத்துக்காக அரிசி அரவை செய்யும் 17 ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிகுப்பம் சோதனைச்சாவடிகள் மற்றும் பள்ளிகொண்டா சங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் முழு வீச்சில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கவுள்ளனர். இதற்கான பணிகளால் விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? அரிசி அரவை ஆலைகளில் நெல் மூட்டைகள் பதுக்கப்படுகிறதா? விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்களா? என்றும் கண்காணிக்க உள்ளனர்.

    ''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 32 வழக்குகளில் 23 பேர் கைது செய்யப்பட்டு, 74 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கடத்தலை தடுக்க திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தலா ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தனித்தனியாக செயல்படும்போது அரிசி கடத்தல் நடவடிக்கை குறையும்.

    ஆந்திர மாநிலத்துக்கான அரிசி கடத்தல் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்டோம். பல நேரங்களில் நாங்கள் இருப்பதை தெரிந்துகொண்டு அவ் வழியாக கடத்தல் வாகனங்கள் செல்வது தடை செய்யப்படுகிறது.

    இதை முறியடிக்க விரைவில் 'ஸ்பை கேமரா' பயன்படுத்த உள்ளோம். இதை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்திவிட்டு நாங்கள் ரகசியமாக காண்காணிக்க முடியும்'' என தெரிவித்தனர்.

    • உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அதில் 4.6 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ரெட்டிப்பட்டியில் கடந்த 9-ந்தேதி உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 4.6 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே அந்த 2 மினி லாரியும், 4.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 டிரைவர்களையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் குழுவினர் நேற்று ரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வுபணியில் ஈடுபட்டனர். இதில் 10 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேசன் கடைகளில் தவறு செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்டு செய்யப்படு வார்கள் என்றனர்.

    ×