search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4.6 டன் ரேசன் அரிசி பறிமுதல்  10 ரேசன் கடை ஊழியர்களுக்கு  ரூ.12 ஆயிரம் அபராதம்
    X

    4.6 டன் ரேசன் அரிசி பறிமுதல் 10 ரேசன் கடை ஊழியர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

    • உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அதில் 4.6 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ரெட்டிப்பட்டியில் கடந்த 9-ந்தேதி உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 4.6 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே அந்த 2 மினி லாரியும், 4.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 டிரைவர்களையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் குழுவினர் நேற்று ரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வுபணியில் ஈடுபட்டனர். இதில் 10 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேசன் கடைகளில் தவறு செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்டு செய்யப்படு வார்கள் என்றனர்.

    Next Story
    ×