search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க ஸ்பை கேமரா கண்காணிப்பு
    X

    ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க ஸ்பை கேமரா கண்காணிப்பு

    • 17 ஆலைகளில் திடீர் சோதனை
    • கடத்தலில் ஈடுபட்ட 23 பேர் கைது

    வேலூர்:

    தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்துகின்றனர். அங்குள்ள அரசி ஆலைகளில் பாலீஷ் செய்யப்படும் அரிசி மீண்டும் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தையொட்டிய கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனுமதியுடன் பொது விநியோக திட்டத்துக்காக அரிசி அரவை செய்யும் 17 ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிகுப்பம் சோதனைச்சாவடிகள் மற்றும் பள்ளிகொண்டா சங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் முழு வீச்சில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கவுள்ளனர். இதற்கான பணிகளால் விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? அரிசி அரவை ஆலைகளில் நெல் மூட்டைகள் பதுக்கப்படுகிறதா? விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்களா? என்றும் கண்காணிக்க உள்ளனர்.

    ''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 32 வழக்குகளில் 23 பேர் கைது செய்யப்பட்டு, 74 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கடத்தலை தடுக்க திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தலா ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தனித்தனியாக செயல்படும்போது அரிசி கடத்தல் நடவடிக்கை குறையும்.

    ஆந்திர மாநிலத்துக்கான அரிசி கடத்தல் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்டோம். பல நேரங்களில் நாங்கள் இருப்பதை தெரிந்துகொண்டு அவ் வழியாக கடத்தல் வாகனங்கள் செல்வது தடை செய்யப்படுகிறது.

    இதை முறியடிக்க விரைவில் 'ஸ்பை கேமரா' பயன்படுத்த உள்ளோம். இதை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்திவிட்டு நாங்கள் ரகசியமாக காண்காணிக்க முடியும்'' என தெரிவித்தனர்.

    Next Story
    ×