search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin"

    ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.
    பெரும்பாலான ‘டாட்டூ’ ஸ்டூடியோக்களில், டாட்டூ பொறித்ததும் ‘டெர்மலைசர்’ மூலம் அதை பொதிந்துவிடுவார்கள். 24 முதல் 48 மணி நேரம் வரை அதை அசைக்காமல் இருக்கவேண்டும். பின்பு இதமான சுடுநீரில் கழுவி அதை உரித்தெடுக்க வேண்டும். சாதாரண ‘கிளியர் பிலிம்’ ஒட்டியிருந்தால், இரண்டுமணி நேரம் கழித்ததும் அதை உரித்து எடுத்துவிட்டு சுத்தமான நீரால் கழுவிவிடலாம். லேசான ரத்த கறையும் ‘இங்க்’ பிசிறும் இருக்கும். அதை எல்லாம் கழுவி விட்டு, ‘டவல்’ கொண்டு துடைக்க வேண்டும். பொறித்த இடத்திற்கு மேல் பூசுவதற்கு ‘டாட்டூ வேக்ஸ்’ தருவார்கள். அதை பூசிக்கொள்ள வேண்டும். அவர்கள் தராவிட்டால், ‘பேபி ஆயில்’ அல்லது மோய்ஸ்சரசரை 7 நாட்கள் வரை அந்த இடத்தில் பூசிக்கொள்ளலாம். பத்து நாட்களுக்குள் காயங்கள் ஆறி, சருமம் இறுகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

    டாட்டூ பதித்த பத்து நாட்கள் வரை அந்த இடத்தில் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. அதுபோல் அந்த பகுதியில் தூசு படியாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி, எடைதூக்கும் ஜிம் பயிற்சி, வியர்க்கும் அளவுக்கு வேலை செய்தல் போன்றவைகளையும் தவிர்க்கவேண்டும். ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.

    தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிலர், ஏற்கனவே பதித்த டாட்டூவை அழிக்க முன்வருவார்கள். அதை எப்படி அழிக்கலாம் என்று அனுபவமற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால், ‘அதன் மீது உப்புத் தண்ணீரை ஊற்றி தேய்த்துக்கொண்டே இருந்தால், அழிந்துபோய்விடும்’ என்று சிலர் சொல்வார்கள். அந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபடுவது தவறு. அது சருமத்திற்கு பாதிப்பை உருவாக்கும்.



    பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதை நீக்கும் முறையும் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. லேசரை பயன்படுத்தி அழிக்கும் முறையே பெரும் பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் லேசர் மூலம் உடனடியாக முழுமையாக அழித்துவிட முடியாது. பதிக்கப்பட்டிருக்கும் டாட்டூவின் அளவு, சருமத்தின் தன்மை, பதிக்கப்பட்ட டாட்டூவின் ஆழம் போன்றவைகளை பொறுத்ததுதான் அதை அழிப்பது பற்றி தீர்மானிக்க முடியும். சிலருக்கு இரண்டு, மூன்று முறை கூட லேசரை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.

    டாட்டூ கலைஞர்கள் சிலர் கொள்கைரீதியாக சில முடிவுகளை எடுத்து பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் காதல் தரும் வேகத்தில் தங்கள் காதலன் பெயரை டாட்டூவாக பதித்துக்கொள்கிறார்கள். ‘நீ என் உயிரைப் போன்றவன்’ என்று கூறி தனது காதலனிடம் அதை காட்டி பெருமைப்படவும் விரும்புகிறார்கள். ஆனால் டாட்டூ பதித்த அடுத்த மாதத்திலோ அல்லது ஆறு மாதங்களிலோ காதல் முறிந்துபோய்விட, அந்த பெயர் அவர்களுக்கு அருவறுப்பை ஏற்படுத்துகிறது.

    அதனால் ‘டாட்டூ’ பதித்த கலைஞரையே தேடிவந்து, அந்த டாட்டூவை எப்படியாவது உடனே அழித்துவிட வேண்டும் என்று மன்றாடுகிறார்கள். இந்த நெருக்கடிக்கு இடம் கொடுக்காத கலைஞர்கள் சிலர் முதலிலே ‘தாங்கள் காதலர்கள் பெயர்களை பெண்களின் உடலில் பதிப்பதில்லை’ என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதுபோல் டாட்டூ பதிக்க வருபவர்களிடம் அவர்களுக்கு எந்த அளவுக்கு தைரியம் இருக்கிறது என்பதையும் பரீட்சித்து பார்க்கிறார்கள். ஏன்என்றால் சிலர், மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்வதற்கே அலறும் ரகமாக இருப்பார்கள்.

    அவரைப் போன்றவர்கள் முதலில் பச்சைக்கிளி ஒன்றை தங்கள் தோளில் டாட்டூ செய்யும்படி கூறுவார்கள். டாட்டூ பதிக்கத் தொடங்கியதும் முதலில் சிறிது நேரம் வலியை பொறுத்துக்கொள்வார்கள். பின்பு அழுதுவிடுவார்கள். கிளியின் ஒரு சிறகை பதித்ததும் ‘அதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. விட்டுவிடுங்கள்’ என்று கூறி விட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படி சிலர் அரை குறை ‘டாட்டூ’ வுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். கேட்டால், அதுதான் இப்போதைய பேஷன் என்பார்கள்.

    உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும்.
    உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும். ‘டாட்டூஸ்’ சின்னங்கள் உணர்த்தும் அர்த்தங்கள்!

    செமிகோலன்: ‘என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி எதுவும் கிடையாது. எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் கடந்து நான் வாழ்வேன்’ என்பதை ‘செமிகோலன்' சின்னம் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து விடுபட்டவர்களும், தற்கொலை முயற்சிகளில் இருந்து மீண்டவர்களும் இந்த டாட்டூ சின்னத்தை பொறித்துக்கொள்கிறார்கள்.

    தாமரை: இந்த மலரை பொறித்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தாமரை தண்ணீருக்கு மேல் பூத்திருக்கும். அடி ஆழம் வரை தண்டினை வளர்த்து நிலைத்து நிற்கும். சேற்றில் கூட செந்தாமரை மலர்ந்து நிற்கும். அதனால் பல விஷயங்களில் தான் தன்னிகரற்றவர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறவர்கள், இதனை பொறித்துக்கொள்கிறார்கள்.

    ஆங்கர்: ‘எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நான் அசையமாட்டேன். மற்றவர்களைகூட பிடித்து இழுத்து வசீகரித்து என்னோடு தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் எனக்கு இருக்கிறது’ என்பதை காட்டுவது இந்த ‘நங்கூரம்’ சின்னம். இது பலத்தின் அடையாளம்.



    யிங்-யாங்: இது சீனத் தத்துவத்தை பிரதி பலிக்கும் சின்னம். வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இந்த சின்னத்தை வரைந்து கொள்கிறார்கள். ‘உலக வாழ்க்கை நன்மையும், தீமையும் கலந்தது. எல்லா நன்மையிலும் தீமை கலந்திருக்கும். அதுபோல் எல்லா தீமையிலும் நன்மையும் கலந்திருக்கும்’ என்ற தத்துவத்தை இந்த சின்னம் உணர்த்துகிறது.

    டிராகன்: இது இரண்டுவிதமான அர்த்தங்களை கொண்டிருக்கிறது. வேகம், எதிர்பார்ப்பு, ஆற்றல் போன்ற நேர்மறை சக்தியின் வெளிப்பாடாகவும், மற்றவர்களை மிரள வைத்து பயம் கொள்ளச் செய்தல், பொறாமை போன்ற எதிர்மறை சக்திகளின் வெளிப்பாடாகவும் இதில் உள்ளது.

    சிறகு: சுதந்திரத்தை உணர்த்துகிறது. இவர்கள் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனந்தமாக வாழ விரும்புவார்கள்.

    சூரியன்: பரந்த ஆற்றல், புதுமையான செயல்பாடு, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

    இவைகளைத் தவிர வேறு பலவிதமான சின்னங்களையும் பொறித்துக்கொள்கிறார்கள். டாட்டூவில் ஒருவர் பொறித்திருக்கும் சின்னத்தை வைத்து அவரது குணாதிசயத்தையும் ஓரளவு கணித்துவிட முடியும்.
    குளிர் காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெயை பயன்படுத்தி வரலாம்.
    வெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

    குளிர் காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெயை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.

    * சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு விரைவில் குணமாகும்.

    * சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

    * 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

    * வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

    * சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.

    உதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி போக்கி மிக மென்மையாக காணப்படும்.

    * சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ஒரு  ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
    வேக்ஸின் செய்யும்போது முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. தற்போது நான்கு வகையான வேக்ஸின்கள் டிரெண்டிங்கில் உள்ளது.
    நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். வேக்ஸின் செய்யும்போது மட்டுமே நிமிடத்திற்குள் முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. வேக்ஸினை சூடேற்றி உருக வைத்த நிலையில், சருமத்தில் தடவி ஸ்டிரிப் கொண்டு அதன் மேல் ஒட்டி நீக்கும் முறையை வேக்ஸினாக அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது.

    மாத்திரை வடிவிலான வேக்ஸின்களும் சந்தைகளில் கிடைக்கிறது. அதும் உருகும் தன்மை கொண்டதே. சில வகை வாக்ஸின்கள் தோலில் ஒட்டாமல் முடியில் மட்டும் ஒட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டு வரும்.உடலில் இருக்கும் ரோமங்களை நீக்குவது அழகு சார்ந்த விசயமே. முடி இல்லாத கைகளும், கால்களும் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக வழுவழுப்பான தன்மையில் மென்மை தன்மை கொண்ட தோலாக தோற்றம் கொடுக்கும். கூடுதல் பொலிவு சருமத்திற்கு கிடைக்கும். ஒருவித குளிர்ச்சித் தன்மை சருமத்திற்கு கிடைத்துவிடும்.

    சில வகையான வேக்ஸின்கள் சருமத்தின் நிறத்தை மாற்றிக்காட்டும் தன்மை கொண்டது. முக்கியமாக முகத்தைப் பொறுத்தவரை வேக்ஸின் பண்ணாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் ஸ்டிரிப் கொண்டு சருமத்தை வேகமாக பிடித்திழுக்கும்போது, முகத்தில் இருக்கும் சருமத்தில் தேவையற்ற பாதிப்புகள் நேரலாம்.

    தற்போது அழகு நிலையங்களில் நான்கு வகையான வேக்ஸின்கள் டிரெண்டிங்கில் உள்ளது…

    1. கோல்ட்(cold) வேக்ஸ்
    2. ஹாட்(hot) வேக்ஸ்
    3. ஸாஃப்ட்(soft) வேக்ஸ்
    4. ஹார்ட்(hard) வேக்ஸ்



    கோல்ட்(cold) வேக்ஸ்

    இது உருகிய நிலையிலேயே இருக்கும். சற்றே திக்கான ஆனால், லிக்யூட் வடிவில் காணப்படும். இதனை சருமத்தில் தடவியதும், ஸ்டிக்கர் டைப்பில் ஒட்டி எடுப்பதுபோல் வரும் ஸ்டிரிப் கொண்டு வேக்ஸ் மேல் வைத்து ஒட்டி எடுக்க வேண்டும். ஒரே முறையில் அனைத்து முடியும் நீங்கி விடும். இதில் வலி என்பது குறைவாகவே இருக்கும்.

    ஹாட்(hot) வேக்ஸ்

    இது க்ரீம் வடிவில் இருக்கும். வாக்ஸின் ஹீட்டரில் இந்தக் க்ரீமை நிறப்பி ஹீட் செய்து ஐஸ் குச்சி வடிவில் இருக்கும் சிப் கொண்டு எடுத்து தடவும் முறை. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி முடிகளை நீக்குதல் வேண்டும்.

    ஸாஃப்ட்(soft) வேக்ஸ்

    கோல்ட் வேக்ஸ் மாதிரியான ஒரு ஃபீல் இந்த வேக்ஸில் இருக்காது. இது செமி சாலிட் வடிவில் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேக்ஸை ஹீட் பண்ணி கையில் அப்ளை பண்ணிவிட்டு, காடா துணியை வைத்து தேய்த்து இழுப்பார்கள். முடி மொத்தமும் துணியில் ஒட்டிக் கொள்ளும். இப்போது பேப்பர் வடிவிலான ஸ்டிப் பயன்பாட்டில் உள்ளது.

    ஹார்ட்(hard) வேக்ஸ்

    ஹார்ட் வேக்ஸை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. துணியோ ஸ்டிரிப்போ இதற்குத் தேவையில்லை. ஹார்ட் வேக்ஸினை சிறிது எடுத்து ஹீட் செய்து கையில் தடவி ஆறியதும் திக்கான நிலைக்கு மாறும். பிறகு விரலால் உறித்து எடுத்தல் வேண்டும். மற்ற வேக்ஸைவிட இதில் வலி சற்று குறைவாக இருக்கும். மென்மையான சருமம் கொண்ட பிறப்புறுப்பு பகுதிகளில் இதை பயன்படுத்தலாம். பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஹீட் செய்து பயன்படுத்தும் வேக்ஸ் களையே அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

    சருமத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைய வகைகள் உள்ளது. அதாவது வறண்ட சருமம், சென்சிட்டிவான சருமம், எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு ஏற்ப சுகர் வேக்ஸ், சாக்லெட் வேக்ஸ், க்ரீன் ஆப்பிள் வேக்ஸ், ஸ்ட்ராபெர்ரி வேக்ஸ், ரோஸ் வேக்ஸ், பியர்ல் வேக்ஸ், கோல்ட் வேக்ஸ், ஆலுவேரா வேக்ஸ் என நிறைய ப்ளேவர்ட் வேக்ஸ்கள் சந்தைகளில் கிடைக்கிறது. சிலவகை வேக்ஸ்களில் சருமத்திற்கு பொலிவும் பளபளப்பும் கூடுதலாகக் கிடைக்கும். உங்கள் சருமத்திற்கு எது ஏற்றதோ, எது தேவையோ அந்த வேக்ஸை அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.
    குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, உலர்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரின் நிவாரணம் தரும். உதடு உலர்வடைவதை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்க இது உதவும்.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு கிளிசரினை பஞ்சில் முக்கி உதடுகளில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதன் மூலம் உதடுகள் உலர்ந்து போவதை தவிர்க்கலாம்.

    உதடுகள் மிருதுவாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிப்பதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம்.

    சுற்றுச்சூழல் மாசுபாடு, முறையான பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் சிலருடைய உதடுகள் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் தினமும் கிளிசரின் பயன்படுத்தலாம். தொடர்ந்து கிளிசரின் தடவி வருவதன் மூலம் உதடுகள் மென்மையாகும். அதேவேளையில் தரமான கிளிசரினை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    வறண்ட உதடுகளால் சிலருக்கு தொந்தரவுகள் ஏற்படும். உதடு வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் நேரும். அதனால் உதடுகளின் உள் அடுக்குகளும் பாதிப்புக்குள்ளாகும். அதற்கு தீர்வு காண்பதற்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம்.

    நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு உதடுகள் உலர்ந்து காணப்படும். உதடுகள் உணர்திறன் மிக்கவை. அவைகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உதடு வெடிப்பு, உதட்டு வலி பிரச்சினைகளை தவிர்க்க கிளிசரினை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.

    கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.
    அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம். அத்திப்பழத்தை எப்படி அழகிற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம். நீங்கள் அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.

    * முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே போதும், பருக்கள் மறைந்து விடும்.

    தேவையான பொருட்கள் :

    அத்தி பழம் - 1
    தேன் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் அத்திப்பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அத்திப்பழ கூழுடன் தேனை கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் இதனை கழுவி கொள்ளலாம். அத்திப்பழத்தின் அற்புத குணம் உங்கள் முகத்தை பருக்கள் இல்லாமல் மாற்றும்.

    * அத்திபழத்தை கொண்டு எப்படி முக பொலிவை பெறுவது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம். அதற்கு தேவையானவை..

    தேவையான பொருட்கள்

    அத்திப்பழம் - 1
    யோகர்ட் - 2 ஸ்பூன்
    தேன் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் அத்திப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் தேனை ஒன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை அத்திப்பழத்துடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அத்தியில் உள்ள வைட்டமின் சி முகத்தை மினுமினுப்பாக்கும். 
    பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். இவற்றையெல்லாம் தேங்காய் எண்ணெயை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.
    பனிக்காலம் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.

    பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

    தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.



    குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெயை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். ஐந்து விரல்களையும் விட்டால், எண்ணெய் அதிகம் வந்துவிடும். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம். 'கை கால் மட்டும்தான் அதிகம் வறண்டுபோகிறது. உடம்பு வறலவில்லை' என்பவர்கள், அந்தப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். பிடிக்காதவர்கள், கை காலுக்கு மட்டும் கடையில் விற்கப்படும் க்ரீமைப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். கொட்டும் பனியிலும் உங்கள் அழகு கொஞ்சும்.
    தேங்காய் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமோ அதே அளவிற்கு அதே அளவிற்கு முகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது.
    முகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள். இனி இந்த பதிவில் எப்படி தேங்காய் பாலை கொண்டு அழகு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

    தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

    வறண்ட சருமத்திற்கு

    முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.

    தேவையான பொருட்கள்  :

    தேங்காய் பால் - 1/2 கப்
    ரோஸ் நீர் - 1/2 கப்
    ரோஜா இதழ்கள் - சிறிதளவு

    செய்முறை :

    முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பதத்துடனும் இருக்கும்.



    இளமையான முகத்திற்கு

    நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 6
    தேங்காய் பால் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

    பருக்கள் நீங்க

    முகத்தின் அழகை கெடுத்து கொண்டிருக்கும் இந்த பருக்களை நீக்குவதற்கு முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் குணமாகும்.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் பால் - 3 ஸ்பூன்
    ஓட்ஸ் - 3 ஸ்பூன்

    செய்முறை :

    முகப்பருக்களை ஒழிக்க முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள் நீங்கும்.
    ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.
    வறண்ட சருமம் என்பது பல்வேறு நோய்களின் வெளிப்பாடு. தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்படும். இப்பிரச்னையை போக்க அதிகளவில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

    ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.

    அருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, தயிர். 100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தால் வறண்ட சருமம் மாறும். தோல் பொலிவு பெறும். உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும். தோல் மென்மையாகும்.

    வறண்ட சருமத்துக்கு கீழாநெல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவ குணங்களை உடைய அருகம்புல் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. அருகம்புல் புரதச்சத்து கொண்டது.

    ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோல் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.

    ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல் பளபளப்பாகும். தோல் ஆரோக்கியத்தை அடையும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல், கீழாநெல்லி, ஆவாரம்பூ போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.  
    ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
    ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

    1. தினசரி மேக்கப் செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

    2. ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பின் கூந்தலை அலசி வந்தால், கூந்தல் மென்மையாக இருக்கும்.

    3. ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிய பின், சில துளிகள் க்ளிசரின் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது முகத்திற்கு சிறந்த க்ளென்சராக இருக்கும்.

    4. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கலாம். இதனால் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி மறைந்துவிடும்.

    5. ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

    6. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவலாம். அப்படி தடவினால் சரும துளைகள் சுருங்கி முகம் பளபளக்கும்.

    7. ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.

    8. சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.

    9. இரண்டு மேஜைக்கரண்டி கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.

    10. ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் மற்றும் நீங்கள் விரும்பும் மாய்சுரைசிங் க்ரீம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து சருமம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். இது உடலுக்கு சிறந்த மாய்சுரைசிங் க்ரீமாக செயல்படும்.
    எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம் என்று திட்டமிடுவதற்கு பதில், உடலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
    ரசாயனப் பொருட்களின் கலவைதான் டியோடரண்டுகளாக உருவாகின்றன. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா விதமான ரசாயனங்களும் ஒத்துக்கொள்ளாது. ஒத்துக்கொள்ளாததை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அதை பயன்படுத்தாதீர்கள்.

    டியோடரண்ட் பயன்படுத்தும் ஆண்கள், முகசவரம் செய்த உடன் இதனை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் சொறி, திட்டாக தடித்தல் போன்றவை ஏற்படும். இந்த தொந்தரவை தவிர்க்க ஒரு மணி நேர இடைவெளியாவது அவசியம்.

    திரவம் மற்றும் ஸ்பிரே வடிவில் இருக்கும் டியோடரண்ட்டை நன்றாக குலுக்கிவிட்டு பயன்படுத்துங்கள்.

    சில வகை டியோடரண்டுகள் வியர்வையோடு செயல்பட்டு அணியும் உடைகளில் மஞ்சள் நிறத்தை உருவாக்கிவிடும். அதை கவனத்தில்கொண்டு பயன்படுத்துங்கள். ஒரே இடத்தில் அதிக அளவு டியோடரண்டு பயன்படுத்த வேண்டாம்.

    எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம் என்று திட்டமிடுவதற்கு பதில், உடலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துங்கள். தினமும் குளித்து, உடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பது, டியோடரண்டு பயன்பாட்டை குறைக்கும். உடலையும் மணக்கச் செய்யும்.
    எப்போதும் எண்ணெய் வழியும் சருமத்துடன் காட்சி தருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க. கொஞ்சம் கீழே சொல்லப் போற விஷயங்களை எல்லாம் முயற்சி செய்து பாருங்க.

    * தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.

    * எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.

    * சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

    * வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.

    * எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவைப் பயன்படுத்துங்கள். எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளக்கும்.

    * பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும்.

    * வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறைவடையும்.

    ×