search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewer"

    • சோழசிராமணியில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாக்கடையால் துர்நாற்றம் வீசிவருகிறது.
    • குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி மெயின் ரோட்டில் இருந்து காவிரி ஆற்று கரைக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாக்கடை கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை சரிவர செய்து முடிக்காததால் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசிவருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் சாக்கடை நீர் இறங்குவதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டி சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை பூக்காரத் தெருவில் பாதாள சாக்கடை உடைந்து சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரதெரு முருகன் கோவில் அருகே செல்லும் சாலை நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    இந்த பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் அதிகமாக உள்ளன. மேலும் பூக்கார தெருவில் பூக்கடைகள் உள்பட பல கடைகள் உள்ளன. இந்த சாலையை தினமும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

    பூக்கார தெரு, முருகன் கோவில் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் பாதாள சாக்கடை உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி கொண்டே உள்ளது. இதனால் சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடி துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியாமல் அதில் விழுந்து விடுகின்றனர். அவர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையில் உள்ள பாதாள சாக்கடை உடைப்பில் கற்களை வைத்துள்ளனர். இதையறிந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சுதாரித்து செல்கின்றனர். இந்த பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பல விதமான நோய்கள் பரவுகிறது.

    இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×