search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "settlement"

    • சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
    • இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.

    இந்த முகாமை வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்தினர். அதில் புது ரேசன் கார்டு கேட்டு 7 பேர், முகவரி மாற்றம்-24 பேர், கார்டு வகை மாற்றம் -47 பேர், பிறந்த தேதி மாற்றம்-11 பேர், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் 64 பேர் உள்பட 331 பேரின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் 4 மனுக்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கணவன்- மனைவி பிரச்சினைகளுக்கு சுமூகமாக பேசி தீர்வு காணலாம் என நீதிபதி டி.ராஜகுமார் பேசினார்.
    • பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கொடுக்கலாம்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகா ஏனாதி ஊராட்சி பொந்தம் புலிகிராமத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம் நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் நடந்தது. ஏனாதி ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

    கிராம மக்களிடையே நீதிபதி டி.ராஜகுமார் பேசும்போது கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கொடுக்கலாம். அது தொடர்பாக நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது கணவன்- மனைவி பிச்சினை தொடர்பாக அதிகமனுக்கள் வந்துள்ளன. கணவன் -மனைவி விரும்பினால் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பேசி சேர்ந்து வாழ வழிவகை செய்யப்படும். காவல்துறை சிவில் வழக்குகளை எடுப்பதில்லை. கோர்ட்டுக்கு வந்தால்தான் தீர்வு கிடைக்கும்.

    ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் குடிநீர் வசதி, சாலைவசதி செய்துதரக்கோரியும், சாலை அமைக்க வனத்துறை எதிர்ப்பதால் அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஏனாதி கிராமத்திலிருந்து பொந்தம் புலிகிராமத்திற்கு காவேரி குடிநீர் தங்குதடையின்றி செல்ல குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதியோர் உதவிதொகை கேட்டும் ஏராளமானோர் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

    சட்டப்பணிகள் குழு கூட்டத்தில் ஊராட்சி துணைதலைவர் லட்சுமி, வழக்கறிஞர் அன்சாரி, சட்ட பணிகள் குழு இளநிலை உதவியாளர் யாஸ் ஜேர பிளாமின், தன்னார்வ தொண்டர் அடைக்கலமேரி, ஏனாதி கிராம அதிகாரி அன்பரசு, சித்திரங்குடி கிராம அதிகாரி சித்ராதேவி உள்பட கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 316 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் தலைமை தாங்கினார். வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள் தாரணி, சக்திவேல், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகன்யாஶ்ரீ மற்றும் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.  மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு உள்ளிட்ட 316 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு ரூ 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 121-க்கு தீர்வு காணப்பட்டது.

    • 1,300 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.6 கோடி தீர்வு காணப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1,300 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.6 கோடியே 2 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. லோக் அதாலத் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார்.

    கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா கோர்ட்டு நீதிபதி சுபத்ரா, முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், விரைவு விசாரணை கோர்ட்டு நீதிபதி விர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி சிட்டிபாபு, எண்.2 நீதிபதி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா. லோக் அதாலத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

    இதுபோன்ற லோக் அதாலத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை பயன்படுத்தி சமரச தீர்வு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். சமரச தீர்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 11 அமர்வுகளாக நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் ஆயிரத்து 300 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு மூலம் முடிவு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.6 கோடியே 2 லட்சத்து ஆயிரத்து 893 தீர்வாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த 3 தம்பதிகள் சமரச முயற்சியின்பேரில் மீண்டும் சேர்ந்து வாழ முடிவாகி சேர்த்து வைக்கப்பட்டனர்.

    • நாமக்கல்லில் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,890 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது.
    • இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.23 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்து 796 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் சுந்தரையா. நந்தினி, பாலகுமார், முருகன், கிருஷ்ணன், மோகனபிரியா, தமயந்தி, ஹரிஹரன் மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதன்மை குற்றவியல் நீதிபதி வடிவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

    இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.

    குறிப்பாக திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த சுதாகர் கடந்த 2016-ம் ஆண்டு முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வக்கீல் வடிவேல் வாதாடி வந்தார். இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழகம் இறந்து போன டிரைவர் குடும்பத்திற்கு ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு ஏற்பட்டது.

    இதேபோல் மோகனூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயக்குமார், கடந்த 2011-ம் ஆண்டு தனியார் பள்ளியில் கட்டுமான பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வக்கீல் கணபதி வாதாடி வந்தார். இந்த வழக்கில் ஒப்பந்ததாரர் சரவணன் ரூ.14 லட்சத்து 9 ஆயிரம் கொடுக்க ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு ஏற்பட்டது. மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என வேறுபாடு கிடையாது எனவும், இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3,581 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,890 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.23 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்து 796 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானா

    மதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது .இதில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, இலவச வேளாண் பொருட்கள் மற்றும் அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி. முருகேசன், ஒன்றியதலைவர்லதா, ஒன்றியகவுன்சிலர்கள். ராதா, அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, தாசில்தார் தமிழரசன் மற்றும் அனைத்து துறைஅரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    ×