search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நீதிமன்றம்"

    • 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்
    • பொதுமக்கள் நலனிற்காக பல தடைகற்களை உச்ச நீதிமன்றம் நீக்கியது என்றார் தலைமை நீதிபதி

    மத்திய அரசாங்கத்தின் உதவியுடனும் சர்வதேச சட்ட அமைப்பு (International Legal Foundation), ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UN Development Programme) மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இணைந்து, இந்திய தேசிய சட்ட சேவை ஆணையம் (NALSA), அனைவருக்குமான சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் பிராந்திய மாநாட்டை இந்திய தலைநகர் புது டெல்லியில் நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்தது.

    இந்த மாநாட்டில் உலகின் 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முக்கிய சட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பங்கேற்று பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாவது:

    1980களின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய உச்ச நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட புரட்சிகரமான முயற்சிகளை எடுத்து அதன் மூலம் பொது நலன் சார்ந்த விஷயங்களில் நீதி பரிபாலனம் சிறப்பாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட தடையாய் இருந்த வழிமுறை சிக்கல்களையும், உச்ச நீதிமன்றம் எளிமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக-பொருளாதார விஷயங்களில் அநீதி ஏற்பட்டால் அவை விரைவாக சரி செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய உச்ச நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக கருதப்படுகிறது. அனைத்துவிதமான மேல்முறையீடுகளையும், சட்ட உதவி மறுக்கப்படும் சூழ்நிலை குறித்த வழக்குகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    • மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
    • ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப் படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், விசா ரிக்கப்பட்டது.

    தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 15 வங்கி கடன் வழக்குகளும், 91 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 31 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 27 காசோ லைகள் வழக்குகளும், 90 குடும்ப நல வழக்குகளும் இதர குற்ற வழக்குகள் 220 என மொத்தம் 474 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.

    இதன்மூலம் ரூ.62 லட்சத்து 35ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    • நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது
    • விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • மக்கள் நீதிமன்றம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக் குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் 13 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 7 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 34 காசோலைகள் வழக்கு களும் என மொத்தம் 54 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகள் சமர சமாக தீர்க்கப்பட்டு ரூ.38 லட்சத்து75ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட 405 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 63 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    • நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
    • மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

    நாமக்கல் ஒருங்கிணைந்த வளாக அமர்வில் நீதிபதிகள் கிருஷ்ணனுன்னி, விஜய்கார்த்திக், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்தனர்.

    இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக அறிவுசார் சொத்துரிமை நுகர்வோர் வழக்குகளும் மற்றும் ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழங்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம் சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.

    மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழு மையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது.

    இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 93 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதில், 62 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 90 லட்சத்து 33 ஆயிரத்து 349 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

    சிறப்பு மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை தலைமை நீதிபதி தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
    • வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
    • 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.

    இதில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியை 78 ஆயிரம் தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.

    நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்க றிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி வட்ட சட்ட பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
    • மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி வட்ட சட்ட பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் (ஓய்வு) தலைமையில் நடந்தது. பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 241 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.68 லட்சத்து 87 ஆயிரத்து 417 வழங்க உத்தரவிடப்பட்டது. ஏற்பாடுகளை பண்ருட்டி வட்ட சட்டபணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது.
    • 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது. இதில் 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், நீதிபதிகள் முனு சாமி, கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலை யில் வழக்கு விசாரணை நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலா ளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.இதில் விபத்து இழப்பீடு வழக்குகள், செக்மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்கு கள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகளுக்கும் சமரச முறையில் தீர்வுகாணப்பட்டது.

    நாமக்கல்லை அடுத்த செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் சரவணன் (வயது 34). இவர் ஹைட்ராலிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2021- பிப்ரவரி 17-ந் தேதி நாமக்கல் போஸ்டல் நகரில் ஒரு லாரியை பழுது பார்த்து கொண்டிருந்த போது, லாரியின் பின்பகுதி திடீரென அவர் மீது இறங்கியது. இதில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்லை அடுத்த போடி நாயக்கன்பட்டி ராசாபுதூரை சேர்ந்தவர் கார்த்திக் (36) கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அலங்கா நத்தம் பிரிவு நோக்கி பைக்கில் சென்ற போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். இந்த இரண்டு வழக்கு களையும் மூத்த வழக்கறிஞர் வடிவேல் நீதிமன்றத்தில் நடத்தி வந்தார். நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் உயிரிழந்த என்ஜினி யர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.48.18 லட்சம், படுகாயம் அடைந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு களில் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறு வதற்கான உத்தரவினை இருவரின் குடும்பத்தின ரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார். மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 2399 வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

    இதில், 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.6.57 கோடி செலுத்தி பைசல் செய்து வைக்கப்பட்டது.

    • சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு ) மேகலா மைதிலி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    தீர்வு தொகையாக ரூ.2,34,08,632 வழங்கப்பட்டது. இதில் வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்குழு உத்தரவு மற்றும் அறிவுறு த்தலின் படி தேசிய அளவி லான மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழுவின், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் நடை பெற்றது. எஸ்.சி, எஸ்.டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பிரபாகர், கூடுதல் சார்பு நீதிபதி எண் -2 அன்வர் சதாத், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம், வக்கீல்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்துக்கொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவணாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ,நெய்வேலி, திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோயில், நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் 13 அமர்வுகள் மூலம் சுமார் 5,327 வழக்குகள் விசார ணைக்கு எடுத்து க்கெள்ள ப்பட்டு 1845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 கோடி 50 லட்சத்து 18 ஆயிரத்து 201 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    • வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் கோர்ட் மற்றும் குமாரபா ளையம் கோர்ட் ஆகிய இடங்களில், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரி வினை, வாடகை விவ காரங்கள்) விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதின்றம் மூலமாக முடித்துகொள் ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமைமாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் யாருக்காவது கோர்ட்டு களில், வழக்குகள் நிலுவையில் இருந்து, அவர்கள் மக்கள் நீதி மன்றத்தை அணுகினால் வழக்குகளுக்கு சட்ட ரீதியா கவும், சமரச முறையிலும் தீர்வு காணப்ப டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

    ×