search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,845 வழக்குகளுக்கு தீர்வு: 17 1/2 கோடி வழங்க உத்தரவு
    X

    கடலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர், வழக்கில் சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்ட ஒருவருக்கு ஆணை வழங்கினார். 

    கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,845 வழக்குகளுக்கு தீர்வு: 17 1/2 கோடி வழங்க உத்தரவு

    • குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்குழு உத்தரவு மற்றும் அறிவுறு த்தலின் படி தேசிய அளவி லான மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழுவின், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் நடை பெற்றது. எஸ்.சி, எஸ்.டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பிரபாகர், கூடுதல் சார்பு நீதிபதி எண் -2 அன்வர் சதாத், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம், வக்கீல்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்துக்கொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவணாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ,நெய்வேலி, திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோயில், நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் 13 அமர்வுகள் மூலம் சுமார் 5,327 வழக்குகள் விசார ணைக்கு எடுத்து க்கெள்ள ப்பட்டு 1845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 கோடி 50 லட்சத்து 18 ஆயிரத்து 201 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    Next Story
    ×