ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்த 327 மனுக்களுக்கு தீர்வு

சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்த 327 மனுக்களுக்கு தீர்வு
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.

இந்த முகாமை வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்தினர். அதில் புது ரேசன் கார்டு கேட்டு 7 பேர், முகவரி மாற்றம்-24 பேர், கார்டு வகை மாற்றம் -47 பேர், பிறந்த தேதி மாற்றம்-11 பேர், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் 64 பேர் உள்பட 331 பேரின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் 4 மனுக்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com