search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவன்- மனைவி பிரச்சினைகளுக்கு சுமூகமாக பேசி தீர்வு காணலாம்
    X

    நீதிபதி டி.ராஜகுமார் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியபோது எடுத்த படம்.

    கணவன்- மனைவி பிரச்சினைகளுக்கு சுமூகமாக பேசி தீர்வு காணலாம்

    • கணவன்- மனைவி பிரச்சினைகளுக்கு சுமூகமாக பேசி தீர்வு காணலாம் என நீதிபதி டி.ராஜகுமார் பேசினார்.
    • பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கொடுக்கலாம்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகா ஏனாதி ஊராட்சி பொந்தம் புலிகிராமத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம் நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் நடந்தது. ஏனாதி ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

    கிராம மக்களிடையே நீதிபதி டி.ராஜகுமார் பேசும்போது கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கொடுக்கலாம். அது தொடர்பாக நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது கணவன்- மனைவி பிச்சினை தொடர்பாக அதிகமனுக்கள் வந்துள்ளன. கணவன் -மனைவி விரும்பினால் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பேசி சேர்ந்து வாழ வழிவகை செய்யப்படும். காவல்துறை சிவில் வழக்குகளை எடுப்பதில்லை. கோர்ட்டுக்கு வந்தால்தான் தீர்வு கிடைக்கும்.

    ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் குடிநீர் வசதி, சாலைவசதி செய்துதரக்கோரியும், சாலை அமைக்க வனத்துறை எதிர்ப்பதால் அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஏனாதி கிராமத்திலிருந்து பொந்தம் புலிகிராமத்திற்கு காவேரி குடிநீர் தங்குதடையின்றி செல்ல குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதியோர் உதவிதொகை கேட்டும் ஏராளமானோர் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

    சட்டப்பணிகள் குழு கூட்டத்தில் ஊராட்சி துணைதலைவர் லட்சுமி, வழக்கறிஞர் அன்சாரி, சட்ட பணிகள் குழு இளநிலை உதவியாளர் யாஸ் ஜேர பிளாமின், தன்னார்வ தொண்டர் அடைக்கலமேரி, ஏனாதி கிராம அதிகாரி அன்பரசு, சித்திரங்குடி கிராம அதிகாரி சித்ராதேவி உள்பட கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×