search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sarathkumar"

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். போர் தொழில் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். போர் தொழில் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம்.
    • மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்கள் இலக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான். அப்போது கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி செயல்படுவோம். இன்னும் கூட்டணி தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி வலுவாகத்தான் இருக்கிறது. மக்கள் மாறவேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறோம். மக்கள் அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகம் தழைக்கவேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது. பணமில்லாத அரசியலை உருவாக்க வேண்டும். மக்கள் எங்கள் பக்கம் திரும்பி பார்க்கும் காலம் வரும் என்று நம்பிக்கையோடு பயணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து சரத்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- காமராஜரை பின்பற்றிதான் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகிறார்களே...

    பதில்:- ஒருவர் விட்டுச்சென்ற பணியை தொடர்கிறார் என்றால், பெருந்தலைவர் காமராஜருக்குதான் அந்த புகழ் சேரும். பொற்கால ஆட்சி தந்த காமராஜரை முன்னோடியாக வைத்து ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கது. அதில் தவறில்லை.

    கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். குறிப்பிட்ட ஒருவர்தான் அரசியலுக்கு வரவேண்டும், வரவேண்டாம் என சொல்ல நான் தயாராக இல்லை.

    கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரோடு கூட்டணி வைப்பீர்களா?

    பதில்:- நாங்கள் தனித்துதான் போட்டியிடப்போகிறோம். யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். நல்லவர்கள், வல்லவர்கள், அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்கள் ஆட்சி புரியவேண்டும்.

    இவ்வாறு சரத்குமார் பதில் அளித்தார்.

    • மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுதல், கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


    சரத்குமார் அறிக்கை

    இந்நிலையில், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கான ஆலோசனையை கண்டித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை மதுக்கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்

    மனித மூளையை சலவை செய்து, சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமான மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கலாமே தவிர, பொருளாதார தேவைக்காக மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து மேலும் மது விற்பனையை அதிகரிக்க நேர்ந்தால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.





    • வேலூர் காட்பாடியில் கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
    • இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

    வேலூர் காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் தம்பி பிரியாணி கடை திறக்கப்பட்டது. அதன் துவக்க விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மேலும் ஒரு சிக்கன் பிரியாணி இலவச என அறிவித்தனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டனர்.

    கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, அந்த வழியாகவந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின் படி போலீசாரால் கூட்டம் கலைக்கப்பட்டு பிரியாணி கடை மூடப்பட்டது.


    பிரியாணிக்காக வரிசையில் நின்ற பொதுமக்கள்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " வேலூர், காட்பாடியில் 'தம்பி பிரியாணி' என்ற பிரியாணி கடை புதிதாக திறக்கப்பட்டு மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    புதிய கடைகள் திறப்பின் போது சலுகைகள் வழங்குவது வழக்கம் . ஆனால், பிரியாணி இலவசம் என்பதற்காக காட்பாடி முதல் வேலூர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு மகள் கூட்டம் அலைமோதியது என்றால் மக்களின் இலவச மோகத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

    கூட்டத்தை கண்ட வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாமல் துவங்கப்பட்டதாக தெரிவித்து கடையை மூடச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கலைந்து செல்லச் செய்யும் சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் மக்களின் மனநிலை, இலவசத்தின் மீதான ஆர்வம், கலெக்டர் வருகை புரிந்து கூட்டத்தை கலைந்து செல்ல கடையை மூட முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அனைத்தும் தலைகுனிவான செயல்.


    சரத்குமார் அறிக்கை

    கடை உரிமம் பெற்று திறக்கப்பட்டதா? பிரியாணி சுவையானதாக இருக்குமா? சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்றெல்லாம் பாராமல் நீண்ட வரிசையில் தயங்காமல் காத்திருந்து பெறலாம் என்றால் அந்த இலவசத்தில் இருக்கும் மோகம் என்ன?

    பொதுமக்கள் என்னிடம் கேட்கலாம், உங்களுக்கென்ன வசதியுடன் வாழ்கிறீர்கள். இலவசம் உங்களுக்கு தேவையல்ல, எங்களின் தேவை என்று கூறலாம். ஆனால் அப்படியல்ல. தன்மானத்தை இழந்து கிடைக்கும் இலவசம் பெறுவது சரியல்ல. நாம் உழைத்து கடின உழைப்பால், முயற்சியால் ஈட்டுகின்ற பொருளைக்கொண்டு உண்ணுகின்ற உணவுதான் சிறப்பு என்று சிந்திப்பவன் என்பதால் நான் இதனை தெரிவிக்கிறேன்.

    வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும். ஆனால், அனைவரும் இலவசத்திற்காக இப்படி நின்றதை பார்த்து பெரும் தலைகுனிவாக எண்ணி வருந்துகிறேன். தன்மானத்தை இழந்து, சுயமரியாதை விடுத்து கிடைக்கும் அத்தியாவசியமற்ற இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.



    • அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. 'போர் தொழில்' திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


    இதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், "விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது" இதற்கு பதிலளித்த சரத்குமார், அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் கூறுகிறோம். விஜய் என்னோடு கூட்டணி வைக்க வேண்டும். நீங்கள் ஏன் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். முதலில் விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும் அதை வரவேற்கிறோம் என்று பேசிவிட்டோம் என்று கோபமாக பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் விவாதம் செய்த சரத்குமார் வாங்க மேடையில் போய் பேசுவோம் என்று மீண்டும் மேடைக்கே சென்றுவிட்டார்.

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
    • இப்படத்தின் வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்தித்து வருகிறது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.



    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.



    இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களுக்கும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.
    • இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

    கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும், அவர் பயன்படுத்திய மரிக்கொழுந்து வாசனை திரவியம் அந்த காலத்தில் அவ்வளவு பேமஸாக இருந்தது. இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்ற இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

    மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா தாக்கம் இன்றுவரை உள்ளது.


    இந்நிலையில், 'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!

    விரைவில் சூர்யவம்சம் - 2!..." என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'சூர்யவம்சம்' இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.



    • விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்வு குறித்து சமக தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.


    விஜய்

    விஜய்

    இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் விஜய் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது வரவேற்கத்தக்கது. எல்லா நடிகர்களும் பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர் மன்றம் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.


    சரத்குமார்

    சரத்குமார்

    நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து வருகிறேன். வரும் 2026 தேர்தலை எப்படி சந்திக்கனும் என்று திட்டங்களை வகுத்து வருகிறேன். அனைவரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம். அரசியல் ஞானம் 14 வயதில் இருந்தே பள்ளி பாடத்திட்டத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதனால் யார் அரசியலுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.

    • அசோக் செல்வன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'போர் தொழில்' திரைப்படம் நேற்று (ஜூன் 9) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    போர் தொழில்

    இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்தை நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் பார்க்கவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோயம்புத்தூரில் தி ஸ்மைல் மேன் படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த இனிய தருணம். நேற்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போர்த்தொழில் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டு பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று இரவு படப்பிடிப்பு இருப்பதால், அதற்குள்ளாக போர்த்தொழில் திரைப்படத்தை ரசிகர்களுடன் காண விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


    • பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.
    • திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை.

    சேலம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் இல்லத்திற்கு வருகை தந்து மணமக்கள் எபிநேசன்-பிரியங்கா ஆகியோரை வாழ்த்தினார்.

    பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.

    இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில்,இதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் உருவாகி கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மதத்தை பற்றி தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்தால் நல்லது.

    சென்னையில் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற கைதி மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள், அவர்களின் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும்.

    திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை. மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

    சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்தும், சீர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பண அரசியலை ஒழித்தால் மட்டுமே இங்கு அரசியல் நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×