என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மணமக்களை வாழ்த்திய காட்சி.
தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினையை தீர்க்க தி.மு.க. நடவடிக்கை எடுக்க வேண்டும்- சரத்குமார்
- பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.
- திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை.
சேலம்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் இல்லத்திற்கு வருகை தந்து மணமக்கள் எபிநேசன்-பிரியங்கா ஆகியோரை வாழ்த்தினார்.
பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.
இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில்,இதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் உருவாகி கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மதத்தை பற்றி தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்தால் நல்லது.
சென்னையில் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற கைதி மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள், அவர்களின் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும்.
திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை. மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்தும், சீர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பண அரசியலை ஒழித்தால் மட்டுமே இங்கு அரசியல் நடத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






