search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samsung"

    • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5 வழங்கப்பட்டு இருக்கிறது.
    • கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கேலக்ஸி A15 5ஜி மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2408 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP லென்ஸ், 2MP சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., 3.5mm ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.

    இதர சென்சார்களாக அக்செல்லோமீட்டர், கைரோ சென்சார், ஜியோ-மேக்னடிக் சென்சார், விர்ச்சுவல் பிராக்சிமிட்டி சென்சார் உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5 வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி A15 5ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 17 ஆயிரத்து 999

    கேலக்ஸி A15 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 19 ஆயிரத்து 499

    கேலக்ஸி A15 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 22 ஆயிரத்து 499

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போன் புளூ பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

    • 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
    • சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.

    அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.

    இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    • கேலக்ஸி A சீரிஸ் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி A சீரிஸ் மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது கேலக்ஸி A05s மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விலை குறைப்பின் படி கேலக்ஸி A05s விலை ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் வைலட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

     


    கேலக்ஸி A05s அம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A05s மாடலில் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • தகவல் பரிமாற்றத்தின போது இடையூறுகளை தவிர்க்கும் திறன் உள்ளது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், இது என்டர்பிரைஸ் பயன்பாடுகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இது மிக கடினமான காலநிலைகளிலும் திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அதிவேக கனெக்டிவிட்டி, வெளிப்புற இடர்பாடுகளால் கனெக்டிவிட்டியில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் திறன் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களாக சாம்சங் குறிப்பிட்டுள்ளது. புதிய கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போன் MIL-STD-810H3 சான்று, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

     


     சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 அம்சங்கள்:

    6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன்

    குளோவ் மோட், கார்னிங் கொரல்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

    ARM மாலி G57 MC2 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 6

    டூயல் சிம் ஸ்லாட்

    சாம்சங் நாக்ஸ் மற்றும் சாம்சங் நாக்ஸ் வால்ட்

    எக்ஸ் கவர் கீ கஸ்டமைசேஷன் வசதி

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்

    MIL-STD-810H

    3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி 3.2

    4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடலின் ஸ்டான்டர்டு எடிஷன் விலை ரூ. 27 ஆயிரத்து 208 என்றும் என்டர்பிரைஸ் எடிஷன் விலை ரூ. 27 ஆயிரத்து 530 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் ஸ்டான்டர்டு எடிஷன் வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும், என்டர்பிரைஸ் எடிஷன் வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 என்டர்பிரைஸ் எடிஷன் வாங்கும் போது ஒரு வருடத்திற்கான நாக்ஸ் சூட் சந்தா வழங்கப்படுகிறது.

    • சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தியது.
    • ஐபோன் 15 ப்ரோ சீரிசில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் அலுமினியத்திற்கு மாற்றாக டைட்டானியம் பயன்படுத்தி இருப்பதாக அறிவித்து இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஆப்பிள் நிறுவனம் டைட்டானியம் பயன்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில், முன்னணி யூடியூபரான ஜாக் நெல்சன் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக பிரித்து, அதன் உறுதித்தன்மையை சோதனைக்கு உட்படுத்தினார். அதில், கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் குறைந்த தரம் கொண்ட டைட்டானியம் பயன்படுத்தி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

     


    ஆப்பிள் தனது ஐபோன் 15 ப்ரோ சீரிசில் அதிக தரமுள்ள டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டியர் டவுன் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் ஸ்மார்ட்போனின் ஃபிரேம் XRF ஸ்கேன் செய்யப்பட்டதும், அதில் சாம்சங் நிறுவனம் இரண்டாம் தர டைட்டானியத்தை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தி இருக்கும் டைட்டானியத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ. 800-இல் துவங்கி ரூ. 1200 வரை இருக்கலாம். சாம்சங் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டைட்டானியத்தின் விலை ரூ. 250-இல் துவங்கி ரூ. 400 வரை இருக்கலாம் என்று நெல்சன் தெரிவித்து இருக்கிறார்.

    • மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
    • கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனின் என்ட்ரி லெவல் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கேலக்ஸி ஃபோல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்வது முதல் முறையாக இருக்கும். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி / ஏற்றுமதி டேட்டாபேஸ்-இல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் Z ப்ளிப் 6 மாடல்களுடன் மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அதன்படி இரு மாடல்களின் குறியீட்டு பெயர் Q6 மற்றும் B6 என சூட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் Q6A என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனமும் இடம்பெற்று இருக்கிறது. இது சாம்சங்-இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

    மேலும் இது சாம்சங்கின் முதல் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. உண்மையில் இத்தகைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றிய தகவல்கள் மட்டும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    • புதிய சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
    • தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.

    சாம்சங் நிறுவனம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டென்ட் ஆகும் வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.

    அதில் புதிய சாதனம் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதும், தானாக நீட்டித்துக் கொள்ளும் டிஸ்ப்ளே ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே, சாதனத்தில் இருந்து நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் இரண்டு தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.


     

    காப்புரிமைகளில் இரு தொழில்நுட்பங்களும்- ஃபிளெக்ஸ் மேஜிக் மற்றும் ஃபிளெக்ஸ் மேஜிக் பிக்சல் என்ற பெயர் கொண்டிருந்தன. இவை ஐரோப்பிய காப்புரிமை பதிவுக்கான தளம் மற்றும் ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த தொழில்நுட்பங்கள் "ஸ்மார்ட்போன்களுக்கான நீளும் ஸ்கிரீன்" என குறிப்பிடப்பட்டுள்ளன.

    அமெரிக்க காப்புரிமை வலைதளத்திலும் இதே போன்ற தொழில்நுட்பம் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவற்றில் இத்தகைய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. காப்புரிமை தகவல்களின் படி புதிய டிஸ்ப்ளே பல்வித மூலைகளில் இருந்து நீட்டித்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. காப்புரிமையில் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    எனினும், அதில் உள்ள தகவல்கள் இது அத்தகைய வடிவம் கொண்ட சாதனம் தான் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதுதவிர இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டி.வி., ஏ.ஆர். எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவைகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு உருவாக்கி வருவதாக தகவல்.
    • சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்தது.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. உண்மையில் இது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையிறுதி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனது பங்குகளை அதிகப்படுத்தும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் சீனாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் நிறுவனம் 19 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது. அதன்படி என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மூலம் இந்த நிலையில் மாற்றம் செய்ய சாம்சங் முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.

    குறைந்த விலை கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த வகையில், இந்த ஆண்டு கேலக்ஸி Z ஃபோல்டு 6, கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களுடன் குறைந்த விலை மாடலையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. 

    • கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும்.
    • பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் வெளியிட்டது. எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், இதில் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான டீசரில் கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

    புதிய கேலக்ஸி ரிங் சாதனத்தை பயன்படுத்தியதாக டெக் துறையை சேர்ந்த கிரீன்கார்ட் தெரிவித்து இருக்கிறார். இந்த சாதனத்தை தன்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும், சிறிது நேரம் அதை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

     

     

    அதன்படி கேலக்ஸி ரிங் சாதனம் மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புதிய சாதனம் அதிகபட்சம் மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாம்சங் வெளியிட்ட டீசர் வீடியோவில் கேலகிஸி ரிங் சில்வர் நிறம் கொண்டிருந்தது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் கேலக்ஸி ரிங் விலை விவரங்கள் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதைய தகவல்களின் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி ரிங் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

    • விவரங்கள் பி.ஐ.எஸ். இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
    • ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய மிட் ரேன்ஜ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில், கேலக்ஸி F55 5ஜி, கேலக்ஸி M55 5ஜி மற்றும் கேலக்ஸி C55 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. இவற்றில் கேலக்ஸி F55 5ஜி மாடல் விவரங்கள் பி.ஐ.எஸ். இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.

    புதிய கேலக்ஸி F55 5ஜி மாடல் SM-E556B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பி.ஐ.எஸ். வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெற்று இருக்காது. எனினும், இந்த வலைதளத்தில் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்க முடியும்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த வாரம் கேலக்ஸி F55 5ஜி மாடலின் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி M55 5ஜி மற்றும் கேலக்ஸி C55 5ஜி மாடல்களும் இடம்பெற்று இருந்தன. கீக்பென்ச் விவரங்களின் படி கேலக்ஸி M55 5ஜி மாடலில் அட்ரினோ 644 GPU, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சி.பி.யு. வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி M54 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி F55 5ஜி மாடல், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி F54 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் கேலக்ஸி F55 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

    • கேலக்ஸி S24 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்று உள்ளன.
    • இந்தியாவில் கேலக்ஸி S24 சீரிஸ் முன்பதிவு துவக்கம்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ்- கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல்களை அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேலும் இந்திய சந்தையில் கேலக்ஸி S24 மற்றும் கேலக்ஸி S24 பிளஸ் மாடல்கள் எக்சைனோஸ் 2400 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் சாம்சங் அறிவித்து இருந்தது.

    கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் மட்டும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்படுகிறது. நேற்றிரவு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல்களின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S23 சீரிஸ் விலையை விட ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும்.

     


    கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் அம்சங்கள்:

    6.2 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே (கேலக்ஸி S24)

    6.7 இன்ச் 3120x1440 பிக்சல் QHD+ டிஸ்ப்ளே(கேலக்ஸி S24 பிளஸ்)

    1-120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பிரைட்னஸ்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    சாம்சங் எக்சைனோஸ் 2400 பிராசஸர்

    எக்ஸ்-க்ளிப்ஸ் 940 GPU

    கேலக்ஸி S24- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி./ 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    கேலக்ஸி S24 பிளஸ்- 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS

    12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ லென்ஸ், OIS

    12MP செல்ஃபி கேமரா

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    கேலக்ஸி S24- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    கேலக்ஸி S24 பிளஸ்- 4900 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

     


    கேலக்ஸி S24 அல்ட்ரா அம்சங்கள்:

    6.8 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் HD+ டிஸ்ப்ளே

    1-120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பிரைட்னஸ்

    கொரில்லா ஆர்மர் பாதுகாப்பு

    ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஃபார் கேலக்ஸி பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1 டி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6.1

    200MP பிரைமரி கேமரா, OIS

    50MP பெரிஸ்கோப் லென்ஸ்

    12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ லென்ஸ், OIS

    12MP செல்ஃபி கேமரா

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய கேலக்ஸி S24 மாடல் ஆம்பர் எல்லோ, கோபால்ட் வைலட், ஆனிக்ஸ் பிளாக் நிறங்களிலும், கேலக்ஸி S24 பிளஸ் மாடல் கோபால்ட் வைலட், ஆனிக்ஸ் பிளாக் நிறங்களிலும் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல் டைட்டானியம் கிரே, டைட்டானியம் வைலட் மற்றும் டைட்டானியம் பிளாக் நிறங்களிலும் கிடைக்கின்றன.

    கேலக்ஸி S24 மாடல் ஆன்லைனில் மட்டும்- டைட்டானியம் புளூ, டைட்டானியம் கிரீன் மற்றும் டைட்டானியம் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S24 மற்றும் கேலக்ஸி S24 பிளஸ் மாடல்கள் சஃபையர் புளூ மற்றும் ஜேட் கிரீன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி S24 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 79 ஆயிரத்து 999

    கேலக்ஸி S24 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 89 ஆயிரத்து 999

    கேலக்ஸி S24 பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 99 ஆயிரத்து 999

    கேலக்ஸி S24 பிளஸ் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999

    கேலக்ஸி S24 அல்ட்ரா 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999

    கேலக்ஸி S24 அல்ட்ரா 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999

    கேலக்ஸி S24 அல்ட்ரா 12 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 999

    புதிய சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு சாம்சங் லைவ் தளத்தில் ஜனவரி 18 முதல் ஜனவரி 20 நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது. சாம்சங் லைவ் நிகழ்வில் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டுயோ வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜனவரி 31-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

    • டி.வி. வாங்கும் போது ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பரிசுகளாக பெற முடியும்.
    • பெரிய திரை கொண்ட டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள்.

    சாம்சங் நிறுவனம் தனது டாப் என்ட் டி.வி. மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன் படி சாம்சங் நியோ QLED, OLED, QLED மற்றும் 4K UHD டி.வி. மாடல்களை வாாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் கீழ் பயனர்கள் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பரிசுகளாக பெற முடியும்.

    "தி ஃபியூச்சர் ஃபெஸ்ட்" என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு விற்பனையில் சாம்சங் டி.வி. மற்றும் சவுன்ட்பார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சலுகைகள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இதில் சாம்சங்கின் பிரீமியம், 50 இன்ச் மற்றும் அதைவிட பெரிய திரை கொண்ட டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த டி.வி. மாடல்கள் சினிமேடிக் ஆடியோ விஷூவல் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளன. இவற்றில் டால்பி அட்மோஸ், நியூரல் ஏ.ஐ. குவாண்டம் பிராசஸர் மற்றும் ஏ.ஐ. அப்ஸ்கேலிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    சலுகை விவரங்கள்:

    பெரிய திரை டி.வி. வாங்கும் போது ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன், ரூ. 69 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் 50 இன்ச் QLED 4K தி செரிஃப் டிவி, ரூ. 37 ஆயிரத்து 990 மதிப்புள்ள வயர்லெஸ் சவுன்ட் பார் உள்ளிட்ட நிச்சய பரிசுகள்.

    சாம்சங் 98 இன்ச் நியோ QLED 4K, QLED 4K டி.வி. வாங்கும் போது கேலக்ஸி S23 அல்ட்ரா இலவச பரிசாக வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட 50 இன்ச் மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்ட நியோ QLED, OLED, QLED மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டி.வி. வாங்கும் போது சாம்சங் Q சீரிஸ் சவுன்ட்பார் வழங்கப்படுகிறது.

    சாம்சங் 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ QLED டி.வி. வாங்கும் போது ரூ. 69 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் 50 இன்ச் QLED 4K தி செரிஃப் டி.வி. வழங்கப்படுகிறது.

    சாம்சங் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் OLED மற்றும் QLED 4K டி.வி.-க்களை வாங்கும் போது ரூ. 15 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் சவுன்ட்பார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 20 சதவீதம் வரை கேஷ்பேக், சாம்சங் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகைகள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை முன்னணி விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இ ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    ×