search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy Ring"

    • நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
    • வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிதாக சாம்சங் 'கேலக்ஸி ரிங்'  என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக உள்ள மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்து உள்ளன.




     

    நவீன ஸ்மார்ட் வாட்சுகளை விட, கேலக்ஸி ரிங் ஒரு ஆரோக்கிய சாதனம் என்று அழைக்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.

    • 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
    • சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.

    அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.

    இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    • கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும்.
    • பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் வெளியிட்டது. எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், இதில் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான டீசரில் கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

    புதிய கேலக்ஸி ரிங் சாதனத்தை பயன்படுத்தியதாக டெக் துறையை சேர்ந்த கிரீன்கார்ட் தெரிவித்து இருக்கிறார். இந்த சாதனத்தை தன்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும், சிறிது நேரம் அதை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

     

     

    அதன்படி கேலக்ஸி ரிங் சாதனம் மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புதிய சாதனம் அதிகபட்சம் மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாம்சங் வெளியிட்ட டீசர் வீடியோவில் கேலகிஸி ரிங் சில்வர் நிறம் கொண்டிருந்தது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் கேலக்ஸி ரிங் விலை விவரங்கள் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதைய தகவல்களின் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி ரிங் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் மேம்பட்ட உடல்நல டிராக் செய்யும் அம்சங்களை கொண்டிருக்கும்.
    • புதிய ஸ்மார்ட் ரிங் உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் பெயரில், புதிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருகிறது. இது உடல்நலம் டிராக் செய்வதற்காக மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ரிங் மாடல் ஆகும். புதிய அணியக்கூடிய சாதனம் பற்றிய தகவல்கள் தென் கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ரிங் மாடலுக்கான காப்புரிமை பெற்று இருக்கிறது.

    புதிய சாதனத்தை உருவாக்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த மெய்கோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ரிங் மாடல், கேலக்ஸி வாட்ச் மாடலை விட உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வகையில் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், புதிய கேலக்ஸி வாட்ச் உற்பத்தி எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     

    ஸ்மார்ட் ரிங் சாதனத்தை மோதிரம் போன்று அணிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் உடல்நலம் பற்றிய விவரங்களை சேகரிக்கும் திறன் கொண்டிருக்கின்றன. பயனர்கள் இவற்றை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பார்க்க முடியும். புதிய ஸ்மார்ட் ரிங், ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களை விட அதிக துல்லியமாக உடல்நல விவரங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது மட்டுமின்றி எக்ஸ்டென்டட் ரியாலிட்டி சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்ட ஸ்மார்ட் ரிங்-க்கு காப்புரிமை பெறுவதற்கான பணிகளில் சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்மார்ட் ரிங் தவிர, சாம்சங் தனது முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனங்களை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜூலை 26-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5, கேலக்ஸி Z ப்ளிப் 5 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மேலும் சில சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ×