search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    குறைந்த விலையில் சாம்சங் Foldable போன் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    கோப்புப்படம் 

    குறைந்த விலையில் சாம்சங் Foldable போன் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு உருவாக்கி வருவதாக தகவல்.
    • சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்தது.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. உண்மையில் இது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையிறுதி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனது பங்குகளை அதிகப்படுத்தும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது.

    கோப்புப்படம்


    கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் சீனாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் நிறுவனம் 19 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது. அதன்படி என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மூலம் இந்த நிலையில் மாற்றம் செய்ய சாம்சங் முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.

    குறைந்த விலை கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த வகையில், இந்த ஆண்டு கேலக்ஸி Z ஃபோல்டு 6, கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களுடன் குறைந்த விலை மாடலையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    Next Story
    ×