search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblock"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • சாலையில் காய்கறிகளை கொட்டினர்

    வேலூர்:

    வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லதா தலைமையிலான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை, உள்ளிட்டவற்றை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் விலைவாசி உயர்வை குறிக்கும் வகையில் திடீரென சாலையில் காய்கறிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறவில்லை
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    திருப்பத்தூர் :

    திருப்பத்தூர் நகராட்சியில் 7- வது வார்டு டபேதர் முத்துசாமி தெருவில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறாமல் அசுத்தமாக உள்ளது. அதன் காரணமாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனை சரி செய்யக்கோரி வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து சென்று அடிப்படை வசதிகளை செய்து தரவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வழியில்லாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
    • எனவே இன்று காலை கரூர், கடவூர் செல்லும் சாலையில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    அய்யலூர் அருகே சுக்காம்பட்டி புதுப்பட்டியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனை அகற்றவேண்டும் என கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையால் குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பின. மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பலமுறை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இன்று காலை கரூர், கடவூர் செல்லும் சாலையில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் மற்றும் சுக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், ஊராட்சி செயலாளர் குமரவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைதொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி ஊராட்சி பூசாரிவலசை பகுதியில் பக்காசூரன்பட்டி, ஆலங்கனேரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை பரதராமி-பனமடங்கி செல்லும் சாலையில் பூசாரிவலசை கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சாலையின் இரு புறமும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்காக வெளியூர் செல்லும் கிராம மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதனை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
    • படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் வக்கீல்கள், தங்களின் பணிகளை புறக்கணித்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இதனை கண்டி த்தும் கோர்ட்டுகளில் அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் திண்டி வனம் வக்கீல்கள் இன்று பணி களை புறக்கணித்தனர்.

    கோர்ட்டு வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்த னர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷ ங்கள் எழுப்பினர்.

    அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த மயிலம் போலீசார், வக்கீ ல்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடைபெ ற்றது. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீ சார் வரவழைக்கப்ப ட்டு சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை அப்புறப்ப டுத்தினர்.

    வக்கீல்கள் செய்த திடீர் சாலைமறியலால் சென்னை - திருச்சி நெடுஞ்சா லையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    • செங்கத்தில் தொடர் விபத்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • போக்குவரத்து பாதிப்பு

    செங்கம்:

    செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கல்லூரி மாணவி சைக்கிளில் பக்கிரி பாளையம் கூட்ரோடு பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ஆம்னி கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் மாணவியை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உயர் கோபுரம் மின் விளக்குகள் தெரியாததால் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

    இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் திருவண்ணா மலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் பொதும க்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறியதை யடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதும க்கள் கலைந்து சென்றனர்.

    சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சாலை மறிய லால் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    • சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மகளுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே தனது மகளை சிகிச்கைக்காக, தியாகராஜன் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.

    ஆஸ்பத்திரியில் அவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர், சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை வலி தாங்கமுடியாமல் துடித்தார். டாக்டரிடம் தியாகராஜன் சென்று கேட்டதற்கு, அவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் தனது மகளுடன், அரசு ஆஸ்பத்திரி முன்பு வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து அவர் தனது மகளை அழைத்துக்கொண்டு, வேறு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் டாக்டர்களை கண்டித்து, தி.மு.க பிரமுகர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த அம்சவிருத்தன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்சவிருத்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அம்சவிருத்தனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் மனைவி விஜயலட்சுமியின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அம்சவிருத்தனின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போக்குவரத்து பாதிப்பால் மாணவர்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி

    ஆரணி:

    ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் பஜனை கோவில் தெரு உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஊராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட கால்வாயில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் வீடுகளின் அருகேவும், தெருக்களிலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகராட்சியிலும் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.

    ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் அருகே உள்ள சேவூர் கிராம வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜனை கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். ஆனால் இதற்கு சேவூரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பஜனை கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ஆரணி- வேலூர் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    செய்யாறு:

    செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

    அப்போது தங்களுக்கு 3 மாதம் சம்பள பாக்கி உள்ளது. 18 வருடமாக வைப்புதொகை நிலுவையில் உள்ளது. அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், 462 ரூபாய் சம்பளம் தர வேண்டும் ஆனால் 300 ரூபாய் தருவதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் அங்கிருந்து சென்று செய்யாறு- ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி கமிஷனர் ரகுராமன் மற்றும் செய்யாறு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதின் பேரில் துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான, வழக்கில் அவரது மேல் முறையீடு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    நாங்குநேரியில் போராட்டம்

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் பொரு ளாளர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல். பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல், அவர் தெரி விக்கும் குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல், அவர் பாராளு மன்றத்துக்கு வருவதையே தடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இப்படியொரு நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல், மக்கள் ஆதரவு காங்கிரசுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்து பயந்து போய் இருக்கிறது மத்திய அரசு. அதனால்தான், ராகுல்காந்திக்கு எதிரான செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத பா.ஜ.க. அரசை மக்கள் தூக்கி எறியும் நாள் நெருங்கி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். மோடியை வீழ்த்திவிட்டு, ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர்.

    ஆலோசனை கூட்டம்

    இதற்கிடையே நேற்று மாலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோனை கூட்டத்தை நடத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

    சாலை மறியல் போ ராட்டத்தில் தொண்ட ர்களுடன் கைதாகி, திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டதால், ஆலோனை கூட்டம் நடத்த முடியாமல் போனது.

    ஆனாலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் பேச வேண்டிய விஷய ங்களை, கைதாகி அடைக்க ப்பட்டு இருந்த திருமண மண்டபத்திலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸர் கட்சியினர் எப்படி எதிர்கொள்வது? பூத் கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது விரிவாகப் பேசினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வட்டாரத் தலைவரும் தங்கள் பகுதியில் இதுதொடர்பான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக அனை வரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம் இலக்கு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது ஒன்றுதான். அதற்காக ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டரும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும், தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    • 25 பேர் கைது
    • தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

    வேலூர்:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த மேல் முறையிட்டு வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனைக் கண்டித்து வேலூர் காங்கிரசார் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் இன்று அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 25 பேரை இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன் பேபி மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    மறியல் போராட்டத்தில் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் சித்தரஞ்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித் பாஷா, மண்டல தலைவர்கள் ரகு, மனோகரன், அசோக் குமார் முகமது அலி ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×