என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்
- கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறவில்லை
- நோய் தொற்று ஏற்படும் அபாயம்
திருப்பத்தூர் :
திருப்பத்தூர் நகராட்சியில் 7- வது வார்டு டபேதர் முத்துசாமி தெருவில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறாமல் அசுத்தமாக உள்ளது. அதன் காரணமாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை சரி செய்யக்கோரி வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து சென்று அடிப்படை வசதிகளை செய்து தரவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






