search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of encroachments"

    • தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது.

    தேனி:

    தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் உள்ள தேனி பங்களாமேடு, குயவர்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சீத்தராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது தேசிய நெடுஞ்சாலை இளநிலை பொறியாளர் தேவநாதன், தேனி தாசில்தார் சரவணபாபு, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் திருமுருகன், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

    • போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்து வருகிறது.
    • காங்கயம் நகராட்சி சார்பில் பலமுறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.

    காங்கயம் :

    கோவை-கரூர், ஈரோடு-பழனி, பெருந்துறை உள்ளிட்ட சாலைப் பகுதிகளை இணைக்கும் நகரமாக உள்ள காங்கயம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்து வருகிறது.சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு காய்கறி மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மேலும் கடைகளுக்கு முன் கூடுதலாக மேற்கூரை அமைக்கப்பட்டும், விற்பனைப்பொருட்களை சாலையில் வைத்தும் உள்ளனர்.இதனால் காங்கயம் நகரில் வாகன விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    காங்கயம் நகராட்சி சார்பில் பலமுறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகம் சார்பில், வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.

    இதையடுத்து நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், நகராட்சிப் பணியாளர்கள் 25 பேர் சாலையோர ஆக்கிரமிப்பு–களை அகற்றினர்.

    • முதுகுளத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
    • ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொந்தம்புலி கிராமத்திற்கு 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். சித்திரங்குடி-பொந்தம் புலி கிராமத்திற்கு இடையில் 150 மீட்டர் தூரம் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை அகற்ற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பரமக்குடி சப்-கலெக்டர்அப்தாப் ரசூல் தலைமையில் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பொந்தம்புலி கிராமத்திற்கு முதுகுளத்தூர்-கமுதி நெடுஞ்சாலையில் இருந்து சித்திரங்குடி கிராமத்தில் 150 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது. இதில் அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'புறம்போக்கில் இருந்த புளிய மரத்தை ஏலம்விட சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏனாதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சித்திரங்குடி வி.ஏ.ஓ. பழனி உள்பட வருவாய்த்துறையினர் இருந்தனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பவர்கிரிட் மூலம் உயர் மின்கோபுரங்கள் அமைத்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்ப டவில்லை.

    பிரதி மாதம் முதல் வாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும்.சாத்தூர், நெமிலி, சென்னச முத்திரம், காவேரிப்பாக்கம், பாகவெளி, உளியூர், சீக்கராஜபுரம், வடகால் கிராமங்களில் உள்ள ஏரி கால்வாய் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேமராக்கள் பழுதாகி உள்ளன.அதனை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசா யிகள் முன்வைத்தனர்.

    கூட்டத்தில், விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வ நாதன், வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டது
    • சாலை அகலமானதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

    திருச்சி:

    திருச்சி பீம நகர் ஹீபர் ரோடு, பாரதிதாசன் சாலை, பறவைகள் சாலை, மத்திய பஸ்லையும் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    இடித்து அகற்றம்

    இது தொடர்பாக கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று காலை அதிரடியாக மேற்கண்ட பீமநகர், பாரதிதாசன் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, பறவைகள் சாலை, மத்திய பஸ் நிலைய சுற்றுப்புற பகுதிகளில் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி பொறியாளர்கள் வேல்முருகன், பா. வா. பக்ருதீன், சுகாதார அலுவலர் தலை விரிச்சான் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் காலை ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

    வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

    பீமா நகர் ஹீபர் ரோடு பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் 5 அடி முதல் 10 அடி வரை சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டது அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் மேற்கூரைகள் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் கட்டுமானங்களும் இருந்தன. இவை அனைத்தும் இடித்து தள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் சாலையின் அகலம் கூடியுள்ளதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேற்கண்ட பகுதிகளில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கண்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தியது. கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென சாலையாகிரமிப்புகள் அகற்றப்பட்டது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேலும் சாலைகளை ஆக்கிரமித்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • முதுகுளத்தூர் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய அதிகாரியை பொதுமக்கள் பாராட்டினர்.
    • நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    முதுகுளத்தூர் பஜாரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 கோடியே 42 லட்சம் செலவில் சாலை அகலப்படுததும் பணி 2 மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நடைபாதைகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நடை பாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால் போலீஸ் உதவியுடன் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டன.

    இந்த பணியின்போது உதவிகோட்டப் பொறியாளர் பிரேமானந், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் மகேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ், குமார், முருகேசன் உள்பட தூய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்

    • தொட்டியம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு அண்ணா நகர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • இந்த குடியிருப்பு பகுதி சாலையின் இருபுறமும் கொட்டகைகள் முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் குப்பைகள் சாலையை ஆக்கிரமித்து காணப்பட்டன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு அண்ணா நகர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆலோசனைப்படி, முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் அறிவுரையின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    இந்த குடியிருப்பு பகுதி சாலையின் இருபுறமும் கொட்டகைகள் முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் குப்பைகள் சாலையை ஆக்கிரமித்து காணப்பட்டன. இவற்றால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்து வந்தனர்.

    இடையூறாக இருந்த பல்வேறுஆக்கிரமிப்புகளையும் ஜேசிபி இயந்திரம் டிராக்டர் கொண்டும் அகற்றும் பணி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கான நடவடிக்கையை தொட்டியம் பேரூராட்சி தலைவர் சா.சரண்யாபிரபு மேற்கொண்டார். இதில் தொட்டியம் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி சீனிவாசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு அமைய உள்ளது
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கடாபுரம் சாலையோரம் 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு, உலர்களம், கச்சாரோடு ஆகியவை அமைய உள்ளது.

    மேற்கண்ட பணிகள் நடைபறுவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் ஐஏஎஸ் நேற்று வருவாய் துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

    அப்போது, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய கண்காணிப்பு அலுவலர், மேற்கண்ட பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை யாரேனும் ஆக்கிரமித்து இருந்தால் அதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது சோளிங்கர் தாசில்தார் கணேசன், காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், பிடிஓ தண்டாயுதபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் அரசு பஸ் மோதி பொறியாளர் பலியானார்.
    • நடைபாதை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் வாகனங்கள், போர்டுகள் ஆகியவை நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறபடுத்தினர்.
    • பண்ருட்டி அருகே வேகாக்கொல்லையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
    • வேகாக்கொல்லை சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் வேகாக்கொல்லை வருவாய் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவி ல்பாஞ்சாலங்குட்டை உள்ளது. இந்த குட்டையி ல்மழைக்காலங்களில் தண்ணீர்சேமிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் மூலம் இந்த பகுதியில்உள்ள விவசாயநிலங்கள் பாசனம் பெற்று வந்தது. தற்போது இங்கு பெரு மளவில்ஆ க்கிரமிப்புகள் செய்யப்பட்டு இந்த குட்டையில் முந்திரி, கம்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த குட்டையில் இருந்த ஆக்கிரமிப்புகளை சென்னை உயர்நீதிமன்ற உத்தரப்படிவருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை ஒத்துழைப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்று ம்பணி நடைபெற்று வருகிறது.

    தாசில்தார் சிவா.கார்த்தி கேயன், இன்ஸ்பெ க்டர் ராஜதாமரை பாண்டியன், துணை தாசில்தார் செந்தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் பிரியா லதா, கிராம நிர்வாக அலுவலர் கிராம ராதிகா, நில அளவையர்கள் குணசேகரன், அரிகரன், பஞ்சாயத்து தலைவர்கள் சங்கரி ரவிச்சந்திரன், அஞ்சலை வீரபாண்டியன்ஆகியோர் அந்தப் பகுதியில் முகாமிட்டு ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றி வருகின்றனர் இதனால் வேகாக்கொல்லைசுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக நடந்தது
    • 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதிகாரிகள் ஆய்வு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கடந்த புதன்கிழமை வரலாறு காணாத அளவில் பெருத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் குடியாத்தம்-காட்பாடி ரோடு நான்கு முனைசந்திப்பு பகுதியில் இருந்து சேம்பள்ளி கூட்ரோடு வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக மறுநாள் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதியில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    போக்குவரத்து நெரிசல் குறித்தும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் சென்றுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்

    அதன் எதிரொலியாக சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கடைகளில் முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கலெக்டர் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதனைதொடர்ந்து நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இப் பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயம் செய்து வந்த னர்
    • போலீசார் பாதுகாப்புடன் நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரி உள்ளது.

    ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.

    வந்தவாசி வடக்கு போலீசார் பாதுகாப்புடன், கோவிலூர் பாசனப் பிரிவு இளநிலைப் பொறியாளர் எஸ்.பரந்தாமன் தலைமையிலான பொதுப்பணித் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அப்போது, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×