search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
    X

    குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

    குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

    • வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக நடந்தது
    • 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதிகாரிகள் ஆய்வு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கடந்த புதன்கிழமை வரலாறு காணாத அளவில் பெருத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் குடியாத்தம்-காட்பாடி ரோடு நான்கு முனைசந்திப்பு பகுதியில் இருந்து சேம்பள்ளி கூட்ரோடு வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக மறுநாள் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதியில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    போக்குவரத்து நெரிசல் குறித்தும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் சென்றுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்

    அதன் எதிரொலியாக சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கடைகளில் முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கலெக்டர் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதனைதொடர்ந்து நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இப் பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×