search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pugazhendhi"

    எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டது.

    தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 70 எம்.எல்.ஏ.க்கள், 10 அமைச்சர்கள் உள்ளனர்.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் அடுத்த முதல்-அமைச்சர் டி.டி.வி. தினகரன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி முறையாக நடைபெறாதது தான்.

    தூர்வாரும் பணிக்கான பொறுப்பை எடுத்து கொண்டு அதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் பாதித்து தண்ணீர் கடலில் கலந்தது குறித்து கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கட்சி தலைவர்களும் பேசிக்கொள்கிறார்கள்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வாழ்நாளை சிறையில் கழித்த பேரளறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, தமிழக கவர்னர் காலம் தாழ்த்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #Sasikala #Pugazhendhi
    தருமபுரி:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #Pugazhendhi
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியை கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமித்து டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியை கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தின கரன் நியமித்துள்ளார். அதற்காக தினகரனுக்கு, புகழேந்தி நன்றி தெரிவித்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, புகழேந்தியை இரண்டு முறை தொகுதி பொறுப்பாளராக நியமித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TTVDhinakaran
    பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு புகழேந்தி இன்று ஆஜர் ஆனார். #Sasikala #Pugazhendhi

    பெங்களூர்

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு சிறையில் வசதிகள் செய்துகொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்திய குழுவினர் அறிக்கையினை உள்துறை மந்திரியிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்றும், இதற்காக ரூ.2கோடி லஞ்சம் வழங்கப்பட்டதா என்று தனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.

    ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இவர்கள் ஏற்கனவே முன்னாள் ஜெயில் டி.ஐ.ஜி.யும், தற்போது ஊர்காவல் படை ஐ.ஜி.யுமான ரூபாவிடம் விசாரணை நடத்தினர். சிறை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான பெங்களூரு புகழேந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஊழல் தடுப்புப்படை பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். கடந்த மாதம் 29-ந் தேதி நேரில் ஆஜராகி போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருந்தனர். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி புகழேந்தி அன்று ஆஜராகவில்லை.

    இன்று (2-ந்தேதி) ஆஜராவதாக கூறி இருந்தார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு அவர் பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புபடை தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sasikala #Pugazhendhi

    ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார் என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.#Rajinikanth #Pugazhendhi
    பெருமாள்மலை:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.

    கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.

    ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டார். காலா படம் திரைக்கு வந்ததும் ராகவேந்திரர் வேண்டாம் என்று கூறினார். இதனால் அரசியல் தனக்கு வேண்டாம் என்று விரைவில் கூறி விடுவார்.


    பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே பிரதமர் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கர்நாடகாவில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அதே நிலைதான் தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் நடைபெறும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான முன்னாள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்தார். #TTVDhinakaran #Pugazhendhi #Thoothukudifiring
    பழனி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான தூத்துக்குடியின் முன்னாள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்திருப்பது கண்துடைப்பு. அவர்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

    ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுவதாக ஆளும் கட்சியினர் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் பயங்கரவாதிகள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அப்படியானால் தமிழக டி.ஜி.பி., துணை முதல்வர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்தது எதற்காக?


    ஜெயலலிதாவை கொன்றது சசிகலா என குற்றம்சாட்டிய ஆளும் கட்சியினர் இன்று ஜெயலலிதா பேசிய ஆடியோவை வெளியிடுவது வெட்கக்கேடானது. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தெருவில் ஒவ்வொன்றாக விற்பனை செய்யப்படுகிறது.

    கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட இந்த ஆணையம் கலைக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோவை நீதிபதி ஆறுமுகசாமி யாரை கேட்டு வெளியிட்டார்? இந்த அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. அது விரைவில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Pugazhendhi #Thoothukudifiring
    ×