search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postmortem"

    • குளிக்க சென்ற போது பரிதாபம்
    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் உடல் மீட்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). கார்பென்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றார். பின்னர் அங்கு உள்ள பாலாற்றின் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.

    அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். பல மணி நேரம் போராடியும் கோவிந்தராஜ் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜை தடுப்பணையில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுப்பணை பகுதியில் கோவிந்தராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார். கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்த சேர்பாடி அருகே அழுகிய நிலையில் சுமார் 60 வயது மதிக்க தக்க ஆண் உடல் கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே பைக்கில் 3 பேர் சென்றனர்
    • பதிவு செய்து போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 16). இவர் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். செங்கம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் அரவிந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார், இறந்த வாலிபர் அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்கவில்லை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சுண்ணாம்புப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யாசின்பாஷா (வயது 30), தக்காளி வியாபாரி.

    இவரது மனைவி தாசின் (23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று யாசின்பாஷா வழக்கம்போல் தக்காளி வியாபாரத்திற்கும், பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றுவிட்டனர்.

    தாசின் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது உறவினர் ஒருவர் வந்துள்ளார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது.

    நீண்ட நேரம் கதவு தட்டியும் தாசின் திறக்கவில்லை . இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது தாசின் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் மீது நேருக்கு நேர் மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளைத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மகன் கோகுல் (வயது 21). இவர் நேற்று தொரப்பாடியில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காட்பாடியில் இருந்து சித்தேரி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    வேலூர் தொரப்பாடி அருகே பஸ் - மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கோகுல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேருக்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளி நாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வினோத் குமார் (வயது 19).

    அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேடி (வயது 25). சாதனா (வயது 32) மற்றும் அன்பு (வயது 25) ஆகிய 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு வாணியம்பாடி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்ற பொது மக்கள் படுகாயம் அடைந்த வேடி, சந்தோஷ்குமார், சாதனா ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் அன்பு லேசான காயமின்றி உயிர் தப்பினார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார்
    • குடும்ப தகராறு காரணமாக விபரீதம்

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த வடமனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 27). ஆடுகளை மேய்த்து வந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முருகன் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வாயில் நுரை தள்ளியபடி கிடந்த கார்த்திகை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு வெம்பாக்கம் பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மோரணம் போலீசில் சுகந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை உமராபாத் பகுதியில் உள்ள கிணற்றில் குமரேசன் பிணம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் குமரேசன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், தொரப்பாடி, ஜீவா நகரை சேர்ந்தவர் வைரமுடி. இவரது மகன் பாபு. இவர் நேற்று இரவு கணியம்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த ரெயில் பாபு மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட பாபு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வந்தவாசி அருகே உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50), லாரி டிரைவர்.

    இவர், நாக்பூரில் இருந்து லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஆலைக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் அவர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அங்கு சென்று காவலாளி பார்த்த போது லோகநாதன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த லோகநாதனின் உடலில் எந்தவித காயமும் இல்லை என்றும் அவர் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொ டர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை,

    திருப்பத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே புதுப்பேட்டை ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் நீல நிற பனியன் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த சாத்தம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தன்(25). கூலி தொழிலாளி.

    நேற்று மதியம் யோகானந்தன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார்.

    இதனை கண்ட அப்பகுதியினர் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வேலு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்து யோகானந்தன் உடலை மீட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் யோகானந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×