search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postmortem"

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூடம் நகரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ரகு. இவரது மகன் சாகர் (வயது 24).

    இவர் வளத்தூர்-குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது ஜோலார் பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த வெங்கடாபுரம் வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது17). இவர் நேற்று பாலமதி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது.

    மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி சசிகுமார் கீழ விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பரை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வீணா (24) என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர்.

    சுபாஷ் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசனுடன்(21), குச்சிபாளையம் பகுதியில் உள்ள மற்றும் நண்பரை பார்க்க தனது பைக்கில் சென்றார்.

    நண்பரை பார்த்துவிட்டு 2 பேரும் பைக்கில் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    போடிபேட்டை அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஜமேந்தார் தோப்பு தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் புகழேந்தி (வயது 20) இவர் கொரியர் சர்வீஸில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டாவில் இருந்து வேலூர் நோக்கி அவரது பைக்கில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இறைவன்காடு அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகன், மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 28).

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்த தாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆற்காடு அடுத்த கரிவேடு கிராமத்திற்கு சென்றுள்ளார்.

    நேற்று காலை வீட்டின் அருகே இருந்த விஷத் தழையை அரைத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு லாட புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந் துவிட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென சாலையின் குறுக்கே வந்தது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அடுத்த செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). இவர் தனது பைக்கில் நண்பருடன் காட்பாடியில் இருந்து செங்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப் போது, சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்தது, அதன்மீது ரமேஷ் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக, அங்கி ருந்தவர்கள் படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பவித்ரா (27).

    இவருக்கும் செய்யாறு வட்டம் எரையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சகாதேவன் என்பவருக்கும் கடந்த 4½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தந்தை முருகேசனுடன் சோழவரம் கிராமத்தில் வசித்து வந்தனர். பவித்ரா கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இறந்த பவித்திராவின் உடலை கைப்பற்றி செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமணம் ஆகி சுமார் நான்கு வருடங்களுக்குள் பவித்ரா இறந்ததால் செய்யாறு சப் கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

    • சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    மேல்மலையனூர் ஒன்றியம் கம்மந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54), விவசாயி.

    இவர் சேத்துப்பட்டில் ஆரணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ செல்வராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றார்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் செம்பேடு பூமணி நகரை சேர்த்தவர் இளையராஜா. இவரது மனைவி பேபி ஷாலினி (வயது 29). இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 11-ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேபி ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.
    • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

    வேலூர், ஜூலை.2-

    வேலூர், வேலப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 46).பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    தினமும் அதிக அளவில் மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சம்பத் தன்னுடைய அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சம்பத் தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தெற்கு போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பத் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு பைபாஸ் சாலையில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அடியில் கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கால்வாயில் விழுந்து இறந்த நிலையில் கிடந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கால்வாயில் கிடந்த உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேற்றில் சிக்கிய சக்கரத்தை மீட்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதி, அல்லி மஜித் தெருவை சேர்ந்தவர் மெகபூப் பாஷா, கூலி தொழிலாளி. இவரது மகன் அப்துல்ரஹ்மான் (வயது 17), இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஒரு இரும்பு வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலை யில் நேற்று காலை லோடு ஆட்டோவில் இரும்பு சட்டங்களை ஏற்றி கொண்டு அப் துல்ரஹ்மான் ஆட்டோவை ஓட்டி சென்றார். வீ.கோட்டா ரோடு தனியார் பள்ளி பின்புறம் அருகில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றபோது ஆட்டோவின் பின் சக்கரம் சேற்றில் சிக்கியது.

    இதனையறிந்த அப்துல்ரஹ்மான் இறங்கி சென்று சேற்றில் சிக்கிய ஆட்டோவை தள்ள முயன்றார். திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது இரும்பு சட்டங்கள் அவர் மீது விழுந்ததால் இடிபாடு களில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று அப்துல் ரஹ்மான் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×