என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை
- வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.
- மின்விசிறியில் பிணமாக தொங்கினார்
வேலூர், ஜூலை.2-
வேலூர், வேலப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 46).பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
தினமும் அதிக அளவில் மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சம்பத் தன்னுடைய அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பத் தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தெற்கு போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பத் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






