search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன.
    • ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கத்தை விட 3 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.

    இதனால் தேவையான அளவுக்கு மது பானங்கள் குவிக்கப்படும். எல்லா கடைகளிலும் இருப்பு அதிகளவில் வைக்கப்பட்டு சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்யப்படும்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து அதிகரித்தது.

    பொங்கல் பண்டிகை மது விற்பனை கடந்த வாரம் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி விட்டன. இறுதி நாளான அன்றும் அதை தொடர்ந்து வந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் எதிர்பார்த்த அளவை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.

    பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கத்தை விட 3 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது.

    வழக்கமாக தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடியை தாண்டி இருக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும், வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும் மதுபாட்டில்கள் விற்பனை நடந்து இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

    மாட்டுப் பொங்கல் அன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலானவர்கள் அதற்கு முதல் நாளே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றும் 2 மடங்கு மது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு குறையாமல் மது விற்பனை ஆகும்.

    நகரப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கிராம புறங்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும். இன்று பிற்பகலில் இருந்து மதுக்கடைகளில் கூட்டம் களை கட்டக்கூடும். பார்கள் நிரம்பி வழியும். மொத்தத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.1000 கோடியை தாண்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 125 சிறிய கடைகள், 60 தனியார் அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. 70 ஆயிரம் சதுர அடியில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 47 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டு களித்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. மாட்டு பொங்கல் தினமான நேற்று 72,547 பேர் வருகை புரிந்துள்ளனர். 58 518 பெரியவர்களும், 14,029 சிறியவர்களும் பொருட்காட்சியை பார்த்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை காணும் பொங்கல் தினமான இன்று அதிகரிக்கும். இன்று குடும்பம் குடும்பமாக மக்கள் பொருட்காட்சிக்கு வருவார்கள். இதனால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    • பொங்கல் விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்க உள்ளன.
    • சொந்த ஊர் சென்றவர்கள் இன்று பெருமளவில் சென்னைக்கு புறப்பட வசதியாக 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளனர்.

    அதே போல பொங்கல் முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக சிறப்புகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 2,100 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனுடன் கூடுதலாக பேருந்துகள் விடப்பட்டு உள்ளது.

    பொங்கல் விடுமுறை முடிந்து நாளை (18-ந்தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்க உள்ளன. இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் இன்று பெருமளவில் சென்னைக்கு புறப்பட வசதியாக 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 2,100 வழக்கமான பஸ்களும், 1,941 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர பிற நகரங்களுக்கு 2,061 சிறப்பு பஸ்கள் கூடுதலாக விடப்பட்டு உள்ளது.

    திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து இன்று மாலையில் இருந்து அதிகளவில் பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பொதுவாக அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க இன்று முன்பதிவு செய்துள்ளனர்.

    கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பகல் நேரத்திலும் கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    சென்னை-கோவை, மதுரை, திருச்சி பகல் நேர ரெயில்களில் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தன. இன்று இரவுக்குள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து சேர திட்டமிட்டு பயணத்தை தொடங்கி உள்ளனர்.

    இதே போல நீண்ட தூரத்தில் இருந்து கார்களில் பயணம் செய்யக்கூடியவர்களும் காலையில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

    இன்று மாலையில் புறப்பட்டு வரக்கூடிய அனைத்து அரசு, தனியார் ஆம்னி பஸ்களும் அதிகாலையில் சென்னைக்கு வந்து விடும். இதனால் பெருங்களத்தூர், கோயம்பேடு பஸ் நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவையும் நாளை (18-ந்தேதி) காலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது. மாநகர பஸ் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக இணைப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    • பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.
    • பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    எந்தவித விமர்சனமும் ஏற்படாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தரமான பச்சரிசி தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் விரைந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    மொத்தம் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்ப அட்டைதாரர்களில் 2 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 791 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் 98 சதவீதமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக தென்சென்னையில் 94 சதவீதம் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்னும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 332 பேருக்கு மட்டுமே பரிசு தொகுப்பு வழங்க வேண்டியது உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர் சென்ற காரணத்தினால்தான் பரிசு தொகுப்பை வழங்க முடியவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

    குறிப்பாக பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகரில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் சென்னை சாலைகளில் ஆள்நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
    • வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளதால் எந்த பகுதியிலும் நெரிசல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பஸ், ரெயில்களிலும், கார்களிலும் சொந்த ஊர்களுக்கு பயணமான மக்கள் நாளை மாலையில்தான் சென்னை திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

    இப்படி சென்னை மாநகரில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் சென்னை சாலைகளில் ஆள்நடமாட்டம் குறைவாகவே உள்ளது. வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளதால் எந்த பகுதியிலும் நெரிசல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறவன் குளம் கிராமத்தில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
    • வெளி நாட்டு பயணிகள், கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இதனை கண்டு களிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான மலேசிய தூதர் தலைமையில் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 134 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று மதுரை வந்தனர்.

    மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தனர். அவர்களை மாவட்ட சுற்றுலா அதிகாரி பாலமுருகன் மாலை அணிவித்து வரவேற்றார். பின்பு அவர்கள் அனைவரும் பஸ்சில் அலங்காநல்லூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் குறவன்குளம் பகுதியில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடந்த கிராமிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

    அங்குள்ள கிராம மந்தையில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெளிநாட்டுப் பயணிகள் பொங்கல் வைக்கும் முறை குறித்து அங்குள்ள பெண்களிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். குறவன் குளம் கிராமத்தில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

    அப்போது வெளி நாட்டு பயணிகள், கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இதனால் அங்கு பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள் களை கட்டியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டிலும் அவர்கள் பங்கேற்று பார்வையிடுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு, சுற்றுலா வழிகாட்டி பிரபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
    • முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

    இவ்விழாவில் வேளாண் உதவி இயக்குனர் சம்பத்குமார், வேளாண் அலுவலர்கள் ஜானகி, கௌதமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர்.

    சமத்துவ பொங்கல் விழாவில் ஆத்தூர் வட்டா

    ரத்தில் கிராம தங்கள் பணி திட்டத்தில் பயிலும்

    வாணவராயர் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், தந்தை ரோவர் மற்றும் முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் சமுதாய பொங்கல் விழா நடந்தது. தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.

    இதில் ஊராட்சி அலுவலகம் முன்பு 5 பானைகளில் பொங்கலிட்டனர். சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் தமிழரசி, மாசிலாமணி, மீனாட்சி, நேத்ரா, காளியம்மாள், கனிமொழி, பாண்டீசுவரி, வீரம்மாள், பால்ரூபதி, புவனேசுவரி, பாண்டியம்மாள், அம்பிகா, நாலுகோட்டை ஊராட்சி செயலர் சோனையா, வழக்கறிஞர் ராம்பிரபாகர், இணை இயக்குநர் நாராயணன், உதவிதிட்ட அலுவலர்கள் அன்புராஜ், குபேந்திரன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடடப்பட்டது.
    • அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மன்ற தலைவர் அ.புசலான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன் புகையில்லா பொங்கல் குறித்து பேசினார். நகர் பகுதிகளில் குப்பைகளை கொட்டவோ, எரிக்கவோ மாட்டோம், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவோம், நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம், மின்சார கழிவுகளை பிரித்து எடுத்து ஒப்படைப்போம், நீர் வரத்து கால்வாய் பகுதிகளில் கழிவுகளை கொட்ட மாட்டோம், பசுமை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிப்போம், மண்வளத்தை காப்போம், நோய் தொற்று பரவாமல் இருக்க காய்ச்சிய நீரை பருகுவோம், துணி பைகளை பயன்படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம், குப்பைகள் இல்லா தூய்மையான பேரூராட்சியாக மாற்றுவோம் போன்ற உறுதிமொழிகளோடு புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • ஆடு, மாடுகளுக்கு ஊட்டிவிட்டு உற்சாகம்
    • ஆடு, மாடு இல்லாத கிராம பகுதி மக்கள் முதல் நகரப் பகுதியில் வாழும் மக்கள் வரை வாசல் பொங்கல் எனப்படும் சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர்

    ராம்ஜிநகர்:

    ஆடியில் விதை விதைத்து, தையில் அறுவடை காணும் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை என் னும் தமிழர் திருநாளில் தை முதல் முதல் நாளான நேற்று ஆடு, மாடு இல்லாத கிராம பகுதி மக்கள் முதல் நகரப் பகுதியில் வாழும் மக்கள் வரை வாசல் பொங்கல் எனப்படும் சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் உழவுத் தொழிலுக்கு உறு–துணையாக இருந்த காளை மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மேலும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்ப–டுத்த தங்கள் வாழ்வோடு பின்னி பிணைந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் பசுமாடுகள், ஆடு–கள் போன்றவைகளுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடினர். இன்று காலையிலேயே அவற்றைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து அலங்க–ரித்து வைத்திருந்த–னர். மாடுகள், காளைகளின் கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்தினர். இன்று மாலை தங்களுடைய வீடு மற்றும் களத்து மேடு–களில் பொங்கல் வைத்து தங்களுடைய மூதாதை–யர்க–ளுக்கு புத்தாடை வைத்து படையலிடுவார்கள். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு பொங்கலை ஊட்டி விவ–சாயிகள் இன்று மாலை கொண்டாடுவதற்கான ஏற்பா–டுகளை செய்து வருகிறார்கள். இதை–யொட்டி கால்நடைகளை கட்டுவதற்கான கயிறு, மணி உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள் இன்று காலை முதல் களை கட்டியது.

    • 18-ந் தேதி வழங்கப்படுகிறது
    • விடுபட்டவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9ம்தேதி தொடங்கப்பட்டது. 13ம்தேதி வரை 5 நாட்களிலும் நாளொன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைத்து அங்காடிகளிலும் வழங்க விநியோகிக்கப்பட்டது. விடுப்பட்டவர்களுக்கு 14ம்தேதியும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 485 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 6 ஆயிரத்து 676 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு நாளை மறு நாள் (18ம்தேதி) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பு பெறப்படாமல் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நாளை மறு நாள் முதல் தங்களுக்குரிய ரேசன் கடையில் பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிரிவாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
    • பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மண்பானையில் பொங்கல் வைத்தனர்.

    விழாவில் கரகம் ஆடுதல், உறியடித்தல், மாட்டுவண்டி பயணம், கிளி ஜோசியம் பார்த்தல், உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றும், கண்டும் ரசித்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலையில கரகம் வைத்து ஆடி அசத்தினர். மேலும் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    கும்மியடித்தல், கரகம் ஆடுதல், மாட்டு வண்டி பயணம் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.

    ×