search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police searching"

    கோவை செல்வபுரம் குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை செல்வபுரம் செல்வாம்பதி குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். நிர்வாண நிலையில் மிதந்த பெண்ணின் தலை, கைகள், வயிறு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் தனித்தனியாக வீசப்பட்டு இருந்தது. கால்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

    கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சமீபத்தில் மாயமான இளம்பெண்களின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி வீசியிருப்பதால் இவ்வழக்கில் குறைந்தது 2-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அதற்குள் அரிசியை போட்டு குளத்தில் வீசி உள்ளனர். இதனால் 3 நாட்களுக்கு பிறகே உடல் வெளியே வந்துள்ளது. 

    நன்கு திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், இந்த கொலையில் கூலிப்படை கும்பல் ஈடுபட்டி ருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடித்தால், இவ்வழக்கில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால்  அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக மாநகர துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி அருகே கடன் பிரச்சினையில் தொழில் அதிபரை கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்கூட்டுடன்காடு மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 46), தொழில் அதிபர். இவருடைய மனைவி சங்கரம்மாள் (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முத்துகிருஷ்ணன், புதுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணனிடம் முத்துகிருஷ்ணன் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். இந்த கடனை திருப்பித்தருமாறு கிருஷ்ணன் பலமுறை கேட்டு வந்தார். ஆனால், முத்துகிருஷ்ணன் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலையில் முத்துகிருஷ்ணன் கே.பி.தளவாய்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அல்லிகுளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவரை 2 கார்களில் வந்த கிருஷ்ணன், கனி உள்ளிட்ட 7 பேர் வழிமறித்தனர். பின்னர் அவரை காரில் கடத்திச்சென்றனர்.

    இதுகுறித்து சங்கரம்மாள் புதுக்கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். போலீஸ் தேடுவதை அறிந்த கிருஷ்ணன், கனி உள்ளிட்டோர் இரவு 10.30 மணிக்கு முத்துகிருஷ்ணனை தெய்வச்செயல்புரம் ரோடு காட்டு பகுதியில் காரில் வந்து இறக்கி விட்டுவிட்டு சென்றனர்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர். அப்போது அவரது முகம் உள்பட உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் போலீசார் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக முத்துகிருஷ்ணன் தன்னிடம் இருந்த இடத்தை கொடுக்க இருந்தார். ஆனால், அந்த இடத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருப்பதால் கடைசி நேரத்தில் இடத்தை கிருஷ்ணனிடம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், கனி உள்ளிட்டோர் முத்துகிருஷ்ணனை காரில் கடத்தியதும், பின்னர் அவரை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன், கனி உள்ளிட்ட 7 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முத்துகிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீடாமங்கலம் அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோனாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகள் சூர்யா என்ற சுப்புலெட்சுமி. பி.ஏ. முடித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார்.

    அவருக்கு பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் சூர்யாவை பல இடங்களில் தேடினர். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாததால் இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து மாயமான சூர்யாவை தேடி வருகிறார்கள். 
    பாதுகாப்புபடை வீரர் வீட்டில் தங்கிய 15 வயது சிறுமி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 22-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் வீரேந்திரகவுதம் (வயது 38). இவரது மனைவி அனுராதா (32). இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    கணவனும், மனைவியும் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்க ஆள்இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து வீரேந்திரகவுதம் தனது சித்தப்பா மகள் பலாக் (15) என்ற சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வீரேந்திரகவுதமும், அனுராதாவும் வேலைக்கு சென்றிருந்தபோது குழந்தையை சிறுமி பலாக் கவனித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்தனர். இரவு அவர்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தை மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. பலாக்கை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி பலாக்கை தேடி வருகின்றனர்.

    தொழில் அதிபரை கடத்திய புதுவை கூலிப்படையை பிடிக்க தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி தொழில் அதிபர் விஜயரங்கனை நேற்று முன்தினம் மர்ம மனிதர்கள் தாக்கி காரில் கடத்தி சென்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கடத்தப்பட்ட விஜயரங்கனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடத்தல்காரர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று விஜயரங்கன் வீடு திரும்பினார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபரை கடத்தியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

    விஜயரங்கனுக்கு, புதுவையை சேர்ந்த சிலருடன் தொழில் ரீதியாக பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பிரச்சினை ஏற்பட்டு புதுவையை சேர்ந்த கூலிப்படையினர் விஜயரங்கனை கடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கூலிப்படையினரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    கூலிப்படையினர் பிடிபட்டால்தான் விஜயரங்கன் கடத்தப்பட்டது ஏன்? என்பதற்கான முழு விவரங்களும் தெரியவரும்.

    ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #PambanBridge #BombThreat
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம், சாலை பாலம் உள்ளது.

    நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரம் வந்து செல்வதால் சாலை பாலம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கடலை பார்த்து ரசிப்பது வழக்கம்.



    இந்த நிலையில் இந்த பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன், “பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் ரெயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் இன்று பரபரப்பு காணப்பட்டது. #PambanBridge #BombThreat
    டி.வி. பார்க்க சென்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் கடயம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.வி. பார்க்க செல்வார். அவ்வாறு வீட்டுக்கு சென்று வந்த நிலையில் சுரேஷ், அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனைக்கண்ட அவரது பெற்றோர் உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுபோய் டாக்டரிடம் காண்பித்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே சிறுமியை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×