என் மலர்
நீங்கள் தேடியது "girl student molestation"
பேரையூர்:
திருமங்கலம் தனியார் நர்சிங் கல்லூரியில் 17 வயது சிறுமி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி முடித்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தார். இந் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மலைராஜ் (27) வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில், மாணவி யின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மலைராஜ் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:
தேவிபட்டிணம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப்ரகுமான் (வயது 75). இவர் அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவியை தனது மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கலா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஹபீப்ரகுமானை கைது செய்தார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் கடயம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.வி. பார்க்க செல்வார். அவ்வாறு வீட்டுக்கு சென்று வந்த நிலையில் சுரேஷ், அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனைக்கண்ட அவரது பெற்றோர் உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுபோய் டாக்டரிடம் காண்பித்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சிறுமியை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.






