என் மலர்
நீங்கள் தேடியது "arrested elderly"
பல்லடம்:
பல்லடம் கரைப்புதூர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான இடுவாய் பாரதி நகரை சேர்ந்த தர்மன் (52) கடத்திச்சென்றார்.
மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தர்மன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கேட்டபோது சிறுமி தர்மனிடம் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.
விசாரணையில் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தலைமறைவான தர்மனை தேடியபோது அவர் சின்னகாளிபாளையம் குட்டை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் தர்மனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (35) தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற பொன்னுசாமி (75) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி அரிவாளால் திருமூர்த்தி தலையில் வெட்டினார். இதில் அவரது காது பகுதியில் பலத்த வெட்டு காயம் விழுந்தது.
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குமரலிங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
தேவிபட்டிணம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப்ரகுமான் (வயது 75). இவர் அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவியை தனது மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கலா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஹபீப்ரகுமானை கைது செய்தார்.






