என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது
Byமாலை மலர்11 Oct 2018 2:37 PM GMT
ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியைசேர்ந்த ராஜா முகமது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவுலத் நிஷா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது மகள் அனிஷா (7, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆலங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெரியம்மா நூர் நிஷா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து தன் தங்கையை பார்க்க ஆலங்குடி வந்துள்ளார்.
அப்போது அனிஷா, தன் பெரியம்மா நூர்நிஷாவிடம் தாத்தா அஸ்ரப் அலி தன்னை தூங்கும்போது தூக்கிக் கொண்டுபோய் தனி அறையில் வைத்து தன்னை பாலியல் தாக்குதல் மூன்று முறை செய்ததாக கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நூர்நிஷா தனது தங்கை தவுலத் நிஷாவிடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக அனிஷாவை திருச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு தவுலத் நிஷா அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு குழந்தை அனிஷாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குறித்து நூர்நிஷா ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியை சேர்ந்த அஸ்ரப் அலி (68) என்ற மீன் வெட்டும் தொழிலாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆலங்குடி மாவட்ட உரி மையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைநிலா முன் ஆஜர்படுத்தப்பட்ட அஸ்ரப் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×