என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவிபட்டிணத்தில் மாணவியிடம் பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது
    X

    தேவிபட்டிணத்தில் மாணவியிடம் பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    தேவிபட்டிணம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப்ரகுமான் (வயது 75). இவர் அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவியை தனது மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

    இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் கலா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஹபீப்ரகுமானை கைது செய்தார்.

    Next Story
    ×