search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plant"

    • முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
    • நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியிலுள்ள வெட்டாறு கதவணை, எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ரூ.238.07 கோடியில் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள புதுக்குடியில் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் 4500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும்.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 7250 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் என ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் 18,750 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் கப்பலூரில் 18 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் 3500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டவும் அனுமதி அளித்துள்ளார். தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக தமிழக அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகையான ரூ.2 ஆயிரத்து 57 கோடி நிதியினை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • சாகுபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

    ஆறுமுகநேரி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    தொழிற்சாலை அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் சீனிவாசன், நந்தினி சீனிவாசன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    தாவரங்கள் வெட்டும்போது அவற்றின் உணர்வு மண்டலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது குறித்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.
    நியூயார்க்:

    இயற்கையின் கொடைகளில் ஒன்றாக கருதப்படும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஞானிகளின் ஆத்மார்த்த கருத்து. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்துள்ளன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளும், அதற்கான ஆதாரங்களும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தாவரங்கள் தாக்கப்படும்போது, அவற்றின் நரம்பு மண்டலங்கள் வழியே உணர்வுகள் கடத்தப்பட்டு இதர பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கொண்டு அவை அடுத்து என்ன செய்யும்? என்பது குறித்தான ஆய்வு நீண்டு கொண்டு வருகிறது.

    எனினும், நரம்பு மண்டலமே இல்லாத தாவரங்கள், விலங்குகளை போல தங்கள் உணர்வுகளை அடுத்த பாகங்களுக்கு கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஃப்ளூரோசெண்ட் புரதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமே தாவரங்களின் உணர்வுகள் கடத்தப்படுவது வெளிப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக தாவரவியலாளர் சைமன் கில்ராய் கூறுகையில், ‘இந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்களை தூண்டுகிறது. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது’ என தெரிவித்தார்.

    இதன்மூலம், நாம் அன்றாடம் மிக அலட்சியமாக வெட்டி வீழ்த்தும் தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணர்ந்து, தாவரங்களை வெட்டுவதை குறைத்து இயற்கையையும் பாதுகாக்க முயற்சிப்போம்.


    ×