சாகுபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சாகுபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.
டி.சி.டபிள்யூ. சீனிவாசன், அவரது துணைவி நந்தினி ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தகாட்சி
டி.சி.டபிள்யூ. சீனிவாசன், அவரது துணைவி நந்தினி ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தகாட்சி
Published on

ஆறுமுகநேரி:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

தொழிற்சாலை அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் சீனிவாசன், நந்தினி சீனிவாசன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com