search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலை"

    • பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.

    சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதனால் வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும்.
    • நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும்.

    பின்னர் இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்படும். இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
    • நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியிலுள்ள வெட்டாறு கதவணை, எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ரூ.238.07 கோடியில் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள புதுக்குடியில் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் 4500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும்.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 7250 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் என ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் 18,750 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் கப்பலூரில் 18 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் 3500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டவும் அனுமதி அளித்துள்ளார். தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக தமிழக அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகையான ரூ.2 ஆயிரத்து 57 கோடி நிதியினை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    கீழதிருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் செல்லசாமி. இவருக்கு செங்கமபட்டி பகுதியில் உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை தாசில்தார் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு ஆலையை சோதனை செய்தார்.

    அங்கு பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்ததும், அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர் ராமலட்சுமி, போர்மேன் மாடசாமி ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×