பட்டாசு ஆலைக்கு சீல்

உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலைக்கு சீல்
Published on

விருதுநகர்

கீழதிருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் செல்லசாமி. இவருக்கு செங்கமபட்டி பகுதியில் உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை தாசில்தார் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு ஆலையை சோதனை செய்தார்.

அங்கு பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்ததும், அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர் ராமலட்சுமி, போர்மேன் மாடசாமி ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com