search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plane crash"

    • ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள்.
    • இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

    அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டுவிட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்தது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு வயலில் விழுந்ததை அடுத்து, ஒரு ஏக்கர் தாவரங்கள் தீயால் கருகியது.

    கலிபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கூட்டாட்சி விமான நிர்வாகத்தின் அறிக்கையின்படி, நேற்று அதிகாலை 4.15 மணியளவில் (உள்ளூர் நேரம்), லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சான் டியாகோவிற்கு வடக்கே 65 மைல் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு வயலில் விழுந்ததை அடுத்து, ஒரு ஏக்கர் தாவரங்கள் தீயால் கருகியது. மேலும், விபத்தில் உயிரிழந்தர்களின் விவரம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமான நிர்வாகம் விபத்து குறித்து விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பிரான்சின் கிழக்கு ஹவுட்- ரின் பகுதியில் ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே நகரிலிருந்து பயணித்த விமானம் காணாமல் போனதால், பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    விமானத்தில் பயணித்த விமானியும் அவரது பயணியும் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர் பிழைக்கவில்லை. இருவரையும் சடலமாக மீட்டனர்.

    விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அருகிலுள்ள சாக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து சுற்றுலா விமானமாக புறப்பட்டது. இந்நிலையில் நியூசாடெல் மலைப் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.

    நியூசாடெல் மலைகளின் சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • இவரது குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
    • விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

    இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

     

    டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து, 'நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்' எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டிரெவர் ஜேக்கப் தன்பக்க விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார். வரும் வாரங்களில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று விடும். அதன்பின் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

    இதையடுத்து, தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
    • விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு வீட்டில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் ஒரு பயணி காயம் அடைந்தனர்.

    விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நகரை சுற்றிப் பார்க்க பயன்படும் விமானம் என்பதால் அதில் விமானியும், ஒரு பயணியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.

    விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    • ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

    மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது.

    இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து, உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர் கடற்படை ரோந்து கப்பல் மூலம் விபத்தில் சிக்கிய மூன்று பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

    • கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
    • அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது.

    விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.

    இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    இதனிடையே நெவாடாவில் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட குளிர்கால புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த விமான விபத்து நடந்துள்ளதால் வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்ததா என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    • தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் 5 பேர் சிறிய விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டனர்.
    • விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் உள்ள உலோக உற்பத்தியில் ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதி முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், உலோக ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக அர்கானாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் 5 பேர் சிறிய விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டனர்.

    லிட்டில் ராக் நகரில் உள்ள பில் அண்ட் ஹலாரி கிளின்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து நொருங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • விமானம் தரையிறங்க சென்றபோது தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
    • பலியான இந்தியர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நேபாளத்தில் பொக்கரா விமான நிலையத்தில் எட்டி நிறுவனத்தின் விமானம் தரையிறங்க சென்றபோது தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

    இதில் 72 பேர் பலியானார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஷ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேரும் அடங்குவர். பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வந்தது.

    சஞ்சய் ஜெய்ஸ்வால் உடல் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டது. இதற்கிடையே மற்ற இந்தியர்கள் 4 பேரின் உடல்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 பேரின் உடல்களுடன் குடும்பத்தினர் இந்தியாவுக்கு திரும்பினர்.

    • 2016-ம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள்.
    • 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள்.

    சீரற்ற வானிலையாலும், மோசமான நிலப்பரப்புகளுக்கு இடையே ஓடுதளப் பாதை அமைந்துள்ளதாலும் நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்படுகிறது. நேபாளத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் வருமாறு:-

    * 2012-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி, பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்ற விமானம் ஜோம்சோம் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 15 பேர் இறந்தனர்.

    * 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருபுவன் சர்வதேச விமான முனையத்தில் சீத்தா ஏர் விமானம் அவசரமாக தரை இறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியானார்கள்.

    * 2016-ம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள்.

    * 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள்.

    * 2022-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி முஸ்டாங் மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

    ×