search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panjabootha Thalam"

    • அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.
    • அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் தனி சந்நிதியில் உள்ளது.

    அனுமனுக்கு புதுவால் கொடுத்த தியாகேசர்

    அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.

    பல தலங்களை தரிசித்து திருவாரூரை அடைந்த ஆஞ்சநேயன் திருவாரூர் பராபரனை வழிபட்டான்.

    லிங்கப் பிரதிட்டை செய்து பூஜித்தான்.

    அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ளது.

    ஈசன் திருவருளால் மீண்டும் பழையபடி அழகிய வால் பெற்ற ஆஞ்சநேயன் நோய் தீர்த்த வைத்திய லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தான்.

    • ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.
    • இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-ராமர் வழிபட்ட தலம்

    பிள்ளைப்பேறு இல்லாத தசரதன் பல தலங்களையும் தரிசித்து வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.

    ஆவூர்ப் பசுபதீஸ்வரம் முதலிய தலங்களை வழிபட்ட பின்னர் திருவாரூரை அடைந்தான்.

    ஆரூர் நாயகனை வழிபட்ட பின் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.

    தந்தையாகவும் தாயாகவும் சேயாகவும் திகழும் தியாகராஜப் பெருமானின் திருவருளால் திருமாலை மகனாக அடையும்பேறு பெற்றான்.

    ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.

    தசரதன் மட்டுமன்று அவன் தந்தையான அஜன், தசரதன் மகன் ராமன், அவனுடைய புதல்வர்கள் லவன் குசன் எனத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ரகு வம்சத்தினர் திருவாரூர் பெருமானை பூஜித்து லிங்க பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் அடைந்துள்ளனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.

    • இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
    • இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-கோவில் அமைப்பு

    33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோவிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் அமைந்துள்ளன.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

    இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும்.

    அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்திருக்க வேண்டும்.

    சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.

    சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோவிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

    இக்கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளது.

    ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள் உள்ளன.

    இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது.

    இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.

    அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.

    இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

    இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர்.

    பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.

    தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம்.

    அறநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோவிலாகும்.

    • தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை.
    • பண் - பதினெண் வகைப்பண்

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்

    1. ஆடுதண்டு - மணித்தண்டு,

    2. கொடி - தியாகக்கொடி,

    3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,

    4. மாலை - செங்கழுநீர்மாலை,

    5. வாள் - வீரகண்டயம்,

    6. நடனம் - அஜபா நடனம்,

    7. யானை - ஐராவணம்,

    8. மலை - அரதன சிருங்கம்,

    9. முரசு - பஞ்சமுக வாத்தியம்,

    10. நாதஸ்வரம் - பாரி,

    11. மத்தளம் - சுத்தமத்தளம்,

    12. குதிரை - வேதம்,

    13. நாடு - சோழநாடு,

    14. ஊர் - திருவாரூர்,

    15. ஆறு - காவிரி,

    16. பண் - பதினெண் வகைப்பண்

    என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்க பொருள்களாகும்.

    தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை, அவருடன்

    1. அருளிப்பாடியார்,

    2. உரிமையில் தொழுவார்,

    3. உருத்திரப் பல்கணத்தார்,

    4. விரிசடை மாவிரதிகள்,

    5. அந்தணர்கள்,

    6. சைவர்கள்,

    7. பாசுபதர்கள்,

    8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்கள்.

    • உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
    • தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-சோமாஸ்கந்தர்

    உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.

    அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.

    அவரோடு இணைந்து காட்சி தரும் உமைக்கு கொண்டி எனப் பெயர்.

    தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
    • ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-தல வரலாறு

    திருவாரூர் தியாகராஜர் கோவில், மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோவில் ஆகும். இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

    இக்கோவில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.

    ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார்.

    திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார்.

    பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்;

    அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது.

    இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

    இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

    ×