search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni uthiram"

    • சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோவிலிற்கு சென்று புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம்.
    • அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    கணவன் மனைவி பிரச்சனைகள் நீங்க பங்குனி விரதம்

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் விலகும்.

    கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும்.

    அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோவிலிற்கு சென்று புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம்.

    தெய்வ நிலையை அடைய உதவும் விரதம்

    எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும்.

    அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

    விரத பலன்கள்

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

    நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

    தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும்.

    இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை அன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்¬ப பெறுவார்கள்.

    கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் நாம் அமைகின்றோம்.

    லாபம் பெருகும், நிம்மதி தொடரும். உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.
    • மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.

    பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும் வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு.

    அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டும்.

    அன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம்.

    இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் வள்ளியை மணந்துள்ளார். அது மட்டுமா சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் விளங்குகிறது.

    சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில் தான்.

    கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.

    மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.

    இப்படி பங்குனி உத்திரத்தை நாளின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம்.

    • வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.
    • அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலிற்கு செல்லலாம்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மேலும் திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

    அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.

    வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.

    இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும்.

    அதனால் மனம் செம்மை அடையும்.

    அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

    வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

    நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலிற்கு செல்லலாம்.

    முடிந்தால் பகல் வேளையில் ஏழை எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம்.

    இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.

    மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம்.

    பிறகு இரவில் சாத்வீக மான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.
    • அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    நாமக்கல் நரசிம்மர் தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.

    அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.

    அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.

    சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

    அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

    திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காண தான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.

    ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி தாயார் நிபந்தனை விதித்தாள்.

    ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

    தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள்.

    தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.

    இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

    நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.

    ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.

    இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

    சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக் கோவில்  இருக்கிறது.

    18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.

    பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.

    அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது.

    அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று ஒரு நாள் மட்டுமே சுவாமி தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

    • கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது.
    • எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது.

    பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது.

    கோவிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான்.

    தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார்.

    அப்போது ''என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ''மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் வழங்க வேண்டும்.

    தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!'' என்றும் கோரிக்கை வைத்தான்.

    உடனே முருகன் அவனிடம் ''எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான்.

    'மயூரா சலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    இந்த கோவிலில் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.

    செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரம் 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது.

    இந்த நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராமாள பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    • பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    • மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் சித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.

    நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தில்லையாடி.

    இங்கே ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்.

    விக்ரம சோழனின் ஆட்சிக் காலம் அது.

    அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார் திருக்கடவூர் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

    அதே நேரம், தில்லையாடி திருக்கோவிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார் அந்த மந்திரி.

    சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது.

    உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார்.

    அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன் தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான்.

    அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன்.

    ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது.

    தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான்.

    இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, ஈஸ்வரனை சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான்.

    இதனால் இந்தக் தலத்தின் சிவனார் ஸ்ரீசரணாகரட்சகர் (சாந்தாரைக் காந்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம்.

    அற்புதமான இந்தக் கதையை விவரிக்கும் தலபுராணம் இந்த ஆலயத்தின் பழமை சுமார் 5000 வருடங்களுக்கு மேல் என்கிறது.

    சித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதாந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன.

    ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடை¢க்கும் என்கிறார்கள்.

    பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அது போன்று புரட்டாசி நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம்.

    சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்சவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம்.

    பங்குனி உத்திரத் திருநாளில் 21 தட்டுகளில் பூ பழம், சேலை & வேட்டி என வரிசை வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும்.

    இந்த திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது.

    மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் சித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.

    • இம்முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
    • உடம்பில் மரு உள்ளவர்கள், இச்சுனையில் உப்பு, மிளகு போட்டால் மரு உடனே நீங்கிவிடுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே கலசபாக்கம் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது எலத்தூர் நட்சத்திர கோவில்.

    இங்கு எழுந்தருளி இருக்கும் முருகன் சுயம்பு மூர்த்தி ஆகும்.

    முருகன் சின்ன லிங்க வடிவில் (ஆவுடையார் இல்லாமல்) அமைந்திருப்பதால் முருகனுக்கு சிவசுப்ரமண்யன் என்று பெயர்.

    இம்முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

    சுற்று வட்டாரத்தில் உள்ள முப்பது கிராமத்தாருக்கும் இவரே குல தெய்வம்.

    மலை மேல் வள்ளி தெய்வானையோடு நின்ற கோலத்தில் மிக அழகாக காட்சி தருகிறார்.

    மலை அடிவாரத்தில் பெரிய குளமும், மலை ஏறும் பாதையில் பிள்ளையார், இடும்பன், நவகிரகம் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

    இக்குளத்தில் என்றும் நீர் வற்றுவதே இல்லை.

    மலை மேல் சுனை உள்ளது.

    உடம்பில் மரு உள்ளவர்கள், இச்சுனையில் உப்பு, மிளகு போட்டால் மரு உடனே நீங்கிவிடுகிறது.

    பங்குனி உத்திரம் இங்கு பத்து நாள் உத்ஸவமாக மிகச்சிறப்பாக நடக்கிறது.

    ஏழாம் நாள் தேரோட்டமும் மற்றும் பங்குனி உத்திரத்தின் முதல் நாள் இரவு முருகனுக்கு கல்யாண உத்ஸவமும் வெகு விமர்சையாக நடக்கும்.

    வீட்டில் திருமண வயதில் பெண்ணோ, மகனோ உள்ளவர்கள் இம்முருகனுக்கு கல்யாண உத்ஸவத்தன்று ஒரு ஜோடி பருப்பு தேங்காய் (பணையாரம்) பிடித்துக் கொடுத்தால் உடனே நல்ல வரன் அமைவது கண்கூடு.

    மறு நாள் பங்குனி உத்திரத்தன்று முருகன் ஊருக்குள் சென்று அங்கு ஓடும் ஆறில் தீர்த்தவாரி கண்டருளுவார்.

    எலத்தூரில் அமைந்துள்ள பிருஹன்நாயகி சமேத கரகண்டேஸ்வரரே இவரின் தாய் தந்தையாக கருதப்படுகிறார்கள்.

    இச்சிவன் கோவில் மிகச் சிறியதாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஸ்தலமாக விளங்குகிறது.

    இவ்வூர்க்காரர்கள், இம்முருகனை குல தெய்வமாக கொண்டவர்கள்.

    அதனால் எந்த ஊரில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஊருக்கு வந்து விடுவார்கள்.

    • முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
    • பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவ பெருமான் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார்.

    முருகன் கோவில்களில் பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள்.

    பழனி முழுவதும் காவடி காட்சிகளாக இருக்கும்.

    முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

    பார்வதிதேவிக்கும் பரமசிவனுக்கும் திருமணம் நடந்த சமயம் தேவர்களும் முனிவர்களும் மற்றும் எல்லோரும் தெய்வீக திருமணத்தைக் காண கயிலை செல்கின்றனர்.

    இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது.

    பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவ பெருமான் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார்.

    அகத்திய முனிவரும் தென்திசையில் பொதிய மலையில் தங்கினார்.

    அகத்திய முனிவர் அங்கிருந்த காலத்தில் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.

    இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான்.

    தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான்.

    தன் தோள் மீது பிரமதண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும் வழியில் திருவாவினன் குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்தபோது முருகப்பெருமான் அவ்விரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச் செய்து விட்டார்.

    தன்னையறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயன்றும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்கமுடியாமல் திகைத்து நின்றான்.

    மறுபடி அக்காவடியைத் தூக்க முயன்றபோது சிவகிரி குன்றின் மீது ஓர் அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான்.

    அச்சிறுவனால் தான், மலையை அசைக்கக் கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையில் இருந்து இறங்கும்படி அதட்டினான்.

    சிறுவனோ "மலை தனக்கே சொந்தம்" என வாதிட்டான்.

    சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான்.

    தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.

    தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார்.

    அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தியோடு துதித்தனர்.

    குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.

    இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றது போல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர்.

    இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    • அன்று உறையூரில் பங்குனித் திருவிழா நிகழ்ந்ததை சங்க இலக்கியம் குறிக்கிறது.
    • சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்ததும் இந்த நாளில்தான்.

    ஸ்ரீரங்கத்துப் பெருமாள் பங்குனி உத்திரத்தன்று காவிரியைக் கடந்து உறையூர் நாச்சியார் கோவிலுக்கு சென்று கமலவல்லியோடு சேர்த்தியில் இருந்து வருவார்.

    அன்று உறையூரில் பங்குனித் திருவிழா நிகழ்ந்ததை சங்க இலக்கியம் குறிக்கிறது.

    பங்குனி உத்திர நாளில் காஞ்சி வரதராஜர், பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.

    காஞ்சியில் கம்பை நதிக்கரையில் மாமரத்தினடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பார்வதி, இறைவன் திருவிளையாடலால் கம்பை நதியில் பெருகிய வெள்ளம், சிவலிங்கத்தைச் சிதைத்து விடுமே என்று அன்பால் பதறி, சட்டென்று அதை ஆரத் தழுவிக் கொண்டாள்.

    அவள் அன்பை உணர்ந்து காட்சி தந்த அரன், தேவியைத் திருமணம் செய்து கொண்ட தினமும் இதுவே.

    இன்றும் பங்குனி உத்திரத்தன்று காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இரவில் சுவாமி திருமணம் நடக்கும்போது, முன்பே வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் திருமணத்தையும் அப்போது நடத்திக் கொள்வது உண்டு.

    மகேசன், மதுரையில் மீனாட்சியை மணம்புரிந்து கொண்ட நாளும் இதுவே.

    ஆண்டவனையே ஆண்ட தமிழச்சி ஆண்டாளுக்கும் ஆழிமழைக் கண்ணனுக்கும் பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் கோலாகலமாய்க் கொண்டாடப்படுகிறது.

    லோபமுத்திரை அகத்தியரையும், பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்ட தினம் இதுதான்.

    நந்திதேவர் திருமணம் நடந்த நாளும் இதுவே.

    திருமழபாடியில் அன்று நந்தி கல்யாணம் கண்டால், திருமணத் தடைகள் நீங்கு என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம்.

    அன்று திருவிளக்கு பூஜை செய்தால், பாவங்கள் விலகி புண்ணியம் பெறலாம்.

    காரைக்கால் அம்மையார் முக்திடையந்த தினம் என்பதால், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம் என சாத்திரங்கள் கூறுகின்றன.

    பழநியில் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் தொடங்கியது பங்குனி உத்திர நாளில்தான்.

    தர்மசாஸ்தாவான சபரிமலை அய்யப்பன் அவதாரமானது, அர்ஜுனன் பிறந்தது, வள்ளி அவதாரம் செய்தது ஆகியவையும் இந்நாளில்தான்.

    ரதிதேவியின் வேண்டுதலை ஏற்று, திருலோக்கியில் மன்மதனை உயிர்ப்பித்ததும் பங்குனி உத்திரத்தில்தான்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்ததும் இந்த நாளில்தான்.

    திருக்கழுக்குன்றம் அஷ்டகந்தக திரிபுரசுந்தரி அம்மனுக்கு மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும்.

    ஆண்டுக்கு மூன்று நாட்களில் மட்டுமே முழு மகாபிஷேகம் (உச்சி முதல் பாதம் வரை) நடைபெறும்.

    அவற்றுள் முக்கியமான நாள், பங்குனி உத்திர திருநாள்.

    சந்திர பரிகாரத் தலமான திங்களூர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர நன்னாளில் காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுவது அபூர்வமான தரிசனம்.

    இதனை தரிசித்தால் எல்லா வளமும் கிடைப்பதோடு, மனப் பிரச்சினைகள் நீங்கி, மனத்தெளிவுடன் வாழலாம்.

    • சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.
    • தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ள செய்தது.

    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம்.

    இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?

    மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது.

    நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

    திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது.

    தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ள செய்தது.

    எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்ற போதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி.

    சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.

    அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள்.

    ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள்.

    அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

    மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர்.

    புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார்.

    சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார்.

    பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமே அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது.

    மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது.

    அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது.

    இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார்.

    உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார்.

    மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்.

    அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர்.

    தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர்.

    பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

    அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை.

    தாகம்... தாகம்... என்று கத்தினார்.

    அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார்.

    அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர்.

    சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி "வைகை'' ஆயிற்று.

    இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.

    • முருகனின் படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.
    • முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார்.

    பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

    அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழிமறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

    இந்த மலை ரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையை பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்ட வனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

    அதைக்கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயம் அறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், அஸ்திரங்களும் மோதின. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகா சுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப்படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலைதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்கும் வேளை வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகனின் படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான்.

    முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், கிரவுஞ்ச மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகா சுரனைக் கொன்றது. தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தன்று விரதமி ருந்து, திருமுகனை வேண்டினால், பிறவிப்ப லனையும், நாற்பத் தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.

    • மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம்.
    • சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் `வைகை’ ஆயிற்று.

    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது.

    நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது.

    எட்டுத்திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

    மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவ கனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமே. அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்.

    அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன. அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார்.

    அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி `வைகை' ஆயிற்று. இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.

    ×