search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elathur Murugan"

    • இம்முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
    • உடம்பில் மரு உள்ளவர்கள், இச்சுனையில் உப்பு, மிளகு போட்டால் மரு உடனே நீங்கிவிடுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே கலசபாக்கம் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது எலத்தூர் நட்சத்திர கோவில்.

    இங்கு எழுந்தருளி இருக்கும் முருகன் சுயம்பு மூர்த்தி ஆகும்.

    முருகன் சின்ன லிங்க வடிவில் (ஆவுடையார் இல்லாமல்) அமைந்திருப்பதால் முருகனுக்கு சிவசுப்ரமண்யன் என்று பெயர்.

    இம்முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

    சுற்று வட்டாரத்தில் உள்ள முப்பது கிராமத்தாருக்கும் இவரே குல தெய்வம்.

    மலை மேல் வள்ளி தெய்வானையோடு நின்ற கோலத்தில் மிக அழகாக காட்சி தருகிறார்.

    மலை அடிவாரத்தில் பெரிய குளமும், மலை ஏறும் பாதையில் பிள்ளையார், இடும்பன், நவகிரகம் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

    இக்குளத்தில் என்றும் நீர் வற்றுவதே இல்லை.

    மலை மேல் சுனை உள்ளது.

    உடம்பில் மரு உள்ளவர்கள், இச்சுனையில் உப்பு, மிளகு போட்டால் மரு உடனே நீங்கிவிடுகிறது.

    பங்குனி உத்திரம் இங்கு பத்து நாள் உத்ஸவமாக மிகச்சிறப்பாக நடக்கிறது.

    ஏழாம் நாள் தேரோட்டமும் மற்றும் பங்குனி உத்திரத்தின் முதல் நாள் இரவு முருகனுக்கு கல்யாண உத்ஸவமும் வெகு விமர்சையாக நடக்கும்.

    வீட்டில் திருமண வயதில் பெண்ணோ, மகனோ உள்ளவர்கள் இம்முருகனுக்கு கல்யாண உத்ஸவத்தன்று ஒரு ஜோடி பருப்பு தேங்காய் (பணையாரம்) பிடித்துக் கொடுத்தால் உடனே நல்ல வரன் அமைவது கண்கூடு.

    மறு நாள் பங்குனி உத்திரத்தன்று முருகன் ஊருக்குள் சென்று அங்கு ஓடும் ஆறில் தீர்த்தவாரி கண்டருளுவார்.

    எலத்தூரில் அமைந்துள்ள பிருஹன்நாயகி சமேத கரகண்டேஸ்வரரே இவரின் தாய் தந்தையாக கருதப்படுகிறார்கள்.

    இச்சிவன் கோவில் மிகச் சிறியதாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஸ்தலமாக விளங்குகிறது.

    இவ்வூர்க்காரர்கள், இம்முருகனை குல தெய்வமாக கொண்டவர்கள்.

    அதனால் எந்த ஊரில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஊருக்கு வந்து விடுவார்கள்.

    ×