search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palm tree"

    திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகரில் 7 நாட்களில் 5 ஆயிரம் பனைமர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டனர்.
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேசம் காப்போம் என்ற பெயரில் 1 லட்சம் பனைமர விதைகள் நடும் பணி கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கியது. 

    திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ந்தேதி பழைய சுற்றுலா மாளிகை காலனி அருகில் இதன் தொடக்க  விழா மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.என்.அருள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக நடைபெற்றது. ஏர்போர்ட், ஜங்ஷன், தில்லைநகர், ஸ்ரீரங்கம், பாலக்கரை என அனைத்து பகுதிகளிலும் சாலையோ ரங்கள், வாய்க்கால் ஓரங்களில் பனைமர விதைகள் நடப்பட்டன. 7-வது நாளாக 25-ந்தேதி மலைக்கோட்டை பகுதியில் திருச்சி மாநகர் இலக்கான 5 ஆயிரம் பனைமர விதை நடும் இலக்கு எட்டப்பட்டது. 

    மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை தலைவர்  ந.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், அச்சு ஊடக மைய பிரிவு துணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட பொருளா ளர் சந்தனமொழி, தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும்நிர்வாகிகள் லாரன்ஸ், வெற்றிச்செல்வன், ஆல்பர்ட், பன்னீர் செல்வம், காந்திமார்க்கெட் செல்வக் குமார், முடியரசு, ராஜா, ராதா, குணா, ஜான்,தங்கராஜ், முருகன், செந்தில், இருசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    காவிரி ஆற்றின் கரைகளில் நடப்படும் இந்த பனைமர விதைகள் எதிர்காலத்தில் வெள்ளக்காலங்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கும்  என நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 7 நாட்களில் திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தெரிவித்தார்.
    பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கொட்டங்காட்டை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கு சொந்தமான பனை மரங்கள் தீவத்தா புரம் என்ற இடத்தில் உள்ளன. இதில் இருந்து பதநீர் இறக்கி கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தை சேர்ந்த பற்குணம் (வயது68). என்பவர் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் அப்பகுதியில் குடில் அமைத்து தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று இவர் பனை ஏறிய போது எதிர் பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். காயம் அடைந்த அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பற்குணம் பரிதாபமாக இறந்தார். 

    இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வல்லகுளம் காட்டுபகுதியில் பனையேற சென்ற தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள அரசர்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 70). பனையேறும் தொழிலாளி. இன்று காலை இவர்  வல்லகுளம் காட்டுப்பகுதியில் பனையேற சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது ஒரு பனை மரத்தின் கீழ் மகாலிங்கம் இறந்து கிடந்தார். 

     இது குறித்து தகவல் அறிந்த சேரகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சோமன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திங்களூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    திங்களூரை அடுத்த மாச்சாபாளையம், தச்சந்தோட்டம், வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53). பனை மரம் ஏறும் தொழிலாளி.

    சம்பவத்தன்று சின்ன வீரசங்கிலியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராஜேந்திரன் பனைமரம் ஏறினார். அப்போது எதிர்பாராத வகையில் பனைமரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×