search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nothing"

    • நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • நத்திங் போன் (2) மாடல் பற்றிய தகவலை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    நத்திங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு காதலர் தினத்தை ஒட்டி விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. நத்திங் போன் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) உள்ளிட்ட மாடல்களுக்கு காதலர் தின சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நத்திங் போன் (1) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இரு சாதனங்களும் பிரத்யேக டிசைன், க்ளிஃப் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றன. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பிரத்யேக டுவிஸ்டிங் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் 12.6mm டைனமிக் டிரைவர்கள், க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம், மூன்று HD மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காதலர் தினத்தை ஒட்டி நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். அந்த வகையில் நத்திங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று நத்திங் போன் (1) மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் நத்திங் போன் (1) தற்போது ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    • நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய நத்திங் போன் (2) 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் போன் (2) மாடல் அறிமுகமாவதை சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இது நத்திங் போன் (1) மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய நத்திங் ஸ்மார்ட்போன் சிறப்பான மென்பொருள் அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த நிலையில், புதிய நத்திங் போன் (2) பற்றிய விவரங்களை மைஸ்மார்ட்பிரைஸ் வெளியிட்டு உள்ளது. அதில் புதிய நத்திங் போன் (2) மாடல் நம்பர், வெளியீட்டு விவரம் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய நத்திங் போன் (2) A065 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய நத்திங் போன் (2) மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாத வாக்கில் புது நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக நத்திங் போன் (1) மாடல் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு அறிமுகமாகும் நத்திங் ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர அனுபவம் வழங்கும் என தெரிகிறது. நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய நத்திங் போன்(2) மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    நத்திங் போன் (2) மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், அடாப்டிவ் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இது ஸ்கிரீன் ரிப்ரெஷ் ரேட்-ஐ ஆன் ஸ்கிரீன் தரவுகளுக்கு ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. வரும் மாதங்களில் புதிய நத்திங் போன் (2) பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • நத்திங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக கால் பெய் தெரிவித்தார்.

    நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் நத்திங் தலைமை செயல் அதிகாரி கால் பெய் நத்திங் போன் (1) மாடலின் மேம்ட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதில் நிறுவனம் அவசரம் கொள்ளவில்லை என தெரிவித்து இருந்தார்.

    எனினும், நத்திங் போன் (2) அறிமுகமாகாது என்றில்லை. இரண்டாவது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ள நத்திங் நிறுவனம் திட்டமிடுகிறது. அந்த வகையில், நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த முறை இந்திய சந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது என தெரிகிறது.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த கால் பெய், "நத்திங் போன் (2) மாடலுக்கு அமெரிக்க சந்தை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நத்திங் போன் (2) இந்தியாவில் அறிமுகமாகாது என்றில்லை, ஆனாலும், வெளியீடு முதலில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படும். முன்னதாக நத்திங் போன் (1) மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை."

    "எங்களின் இரண்டாவது ஆண்டில் இருந்ததால், எங்களால் இதை செய்ய முடியவில்லை. மேலும் குழுவாக நாங்கள் புது சாதனங்களை உருவாக்கி வந்ததால் எங்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது எங்களின் நிலை மாறி இருப்பதால், நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல தயாராகி விட்டோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி கால் பெய் எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. எனினும், இது முந்தைய மாடலை அதிக பிரீமியமாக இருக்கும் என்றும் இதன் மென்பொருள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். பிரீமியம் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் வழங்கப்படலாம்.

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நத்திங் போன் (1) மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் நத்திங் போன் (1) விலை குறைந்துள்ளது.

    ப்ளிப்கார்ட் பிங் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ், நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் (1) மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சலுகை விற்பனையில் நத்திங் போன் (1) மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நத்திங் போன் (1) மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 33 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு, சிறப்பு விற்பனை நிறைவு பெற்றதும் மாற்றப்பட்டு விடும்.

    சலுகை விவரங்கள்:

    நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999

    நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 499

    நத்திங் போன் (1) 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 499

    ஐசிஐசிஐ மற்றும் சிட்டி வங்கி பயனர்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ஜனவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    நத்திங் போன் (1) அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி LPDDR 5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஒஎஸ் கொண்டிருக்கும் நத்திங் போன் (1) 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    இத்துடன் 15 வாட் Qi வயர்லெஸ் மற்றும் 5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP53 போன்ற அம்சங்கள் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP சாம்சங் JN1 சென்சார், அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, என்எஃப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்து இருந்தது.
    • புதிய இயர்போன் நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஆடியோ சாதனமாக அறிமுகமானது.

    நத்திங் நிறுவனம் முற்றிலும் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் செமி இன்-இயர் டிசைன் மற்றும் ரோலிங் மெக்கானிசம் கொண்ட உருளை வடிவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் வித்தியாசமான டிசைன் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலிலும் பிரதிபலித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி தான் துவங்க இருக்கிறது. எனினும், இன்று (நவம்பர் 13) மதியம் லிமிடெட் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இதில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்குவோர் ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே நத்திங் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) மாடலை வாங்க பயன்படுத்திய ப்ளிப்கார்ட் அக்கவுண்டில் வாங்க வேண்டும். இன்றைய பிளாஷ் விற்பனையில் வாங்க முடியாதவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி துவங்கும் ஓபன் சேலில் வாங்கிட முடியும். அப்போது நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

    இதனை முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    • நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்தது.
    • அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை இந்தியாவில் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இயர் (ஸ்டிக்) ட்ரூ வயர்லெஸ் இயர்போனை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ஆடியோ சாதனம் ஆகும். எனினும், நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. நத்திங் நிறுவன ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நவம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கும் லிமிடெட் சேலின் போது இந்த சலுகை தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே அரிவிக்கப்பட்டுளள்ளது. அந்த வகையில் ஓபன் சேல் துவங்கும் நவம்பர் 17 ஆம் தேதியில் இருந்து இந்த சலுகையை பெற முடியாது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது இயர்போன் உருளை வடிவம் கொண்டு இருக்கிறது.
    • புதிய நத்திங் இயர்போன் உதட்டு சாயத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் இயர் (ஸ்டிக்) என அழைக்கப்படும் புது இயர்போன் ஹால்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 12.6mm டிரைவர்கள் உள்ளன. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இந்த இயர்போன் மொத்தத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இந்த இயர்போனின் உருளை வடிவம் உதட்டு சாயம் (லிப்ஸ்டிக்) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இதில் உள்ள மூன்று மைக்ரோபோன்கள் அதிக தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த பிளே, பாஸ், ஸ்கிப், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆப்ஷ்ன்களை இயக்க பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    புது இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 29 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. நத்திங் போன் (1) மாடலுடன் இணைக்கும் போது இந்த இயர்பட்ஸ் பிரத்யேக அம்சங்களை பெறுகிறது.

    இவற்றில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், EQ செட்டிங் அட்ஜஸ்ட்மெண்ட், ஃபைண்ட் மை இயர்பட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சங்களை நத்திங் போன் (1) மாடலின் குயிக் செட்டிங்ஸ்-இல் இயக்க முடியும். இந்தியாவில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் துவங்குகிறது.

    • நத்திங் நிறுவனம் ஒவர் தி இயர் ரக ஹெட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மேலும் இந்த ஹெட்போனின் கான்செப்ட் ரெண்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் அடுத்த புதிய சாதனம் ஹெட்போன்களாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆடியோ சாதனத்தின் கான்செப்ட் ரெண்டர் படங்களை நத்திங் நிறுவனர் கால் பெய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ரெண்டர்களை யான்கோ டிசைன் எனும் ஆன்லைன் இதழ் உருவாக்கி இருக்கிறது.

    கால் பெய் இவற்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு, இதனை உருவாக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு ட்விட்டரில் பலரும் இதை அறிமுகம் செய்யுங்கள் என பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஹெட்போன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் நிறுவன ஹெட்போன் நத்திங் ஹெட் (1) என அழைக்கப்படலாம்.

    ரெண்டர்களில் உள்ள நத்திங் ஹெட் (1) பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது போன் (1) மற்றும் இயர் (1) போன்றே இந்த ரெண்டர்களில் உள்ள ஹெட்போனும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் க்ளிம்ப் இண்டர்பேஸ் போன்று இயர்கப்களை சுற்றி எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன.

    ஹெட்போனுடன் சார்ஜிங் ஸ்டாண்ட் ரெண்டரையும் யான்கோ டிசைன் வெளியிட்டு இருக்கிறது. இதில் வயர்லெஸ் காயில்கள் உள்ளன. இத்துடன் ஸ்டாண்டின் பின்புறம் சார்ஜிங் சர்பேஸ் உள்ளது. இந்த இடத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    • நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய இயர்பட்ஸ் மாடலுக்கான டீசர்களை நத்திங் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய இயர்பட்ஸ் நத்திங் இயர் (ஸ்டிக்) என அழைக்கப்படுகிறது. சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி நத்திங் இயர் (ஸ்டிக்) இந்தியாவில் அக்டோபர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் நத்திங் இயர் (ஸ்டிக்) தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் வகையில் கஸ்டம் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் (1) மாடலுக்கான க்ளிம்ப் இண்டர்பேஸ் உடன் நத்திங் இயர் (ஸ்டிக்) டிசைன் விவரங்களை நத்திங் ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

    புதிய இயர்பட்ஸ் அம்சங்கள் இன்னமும் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த இயர்பட்ஸ் விவரம் மற்றும் ரெண்டர்கள் கடந்த வாரம் வெளியாகின. அதில் நத்திங் இயர் (ஸ்டிக்) டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் இயர் டிப்கள் இடம்பெறவில்லை. அந்த வகையில் இந்த இயர்பட்ஸ் ANC வசதியை கொண்டிருக்காது என தெரிகிறது.

    இதேபோன்று வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் வழங்கப்படாத பட்சத்தில் நத்திங் இயர் (ஸ்டிக்) விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுக நிகழ்வு அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    • நத்திங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது சாதனத்திற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
    • இந்த சாதனம் நத்திங் இயர் (ஸ்டிக்) எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் சில தினங்களுக்கு முன்பு தான் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்து இருந்தது. கடந்த ஆண்டு நத்திங் இயர் (1) மாடல் அறிமுகமானதை அடுத்து நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகமானது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மிகவும் குறைந்த எடை, சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போன் மிகவும் வித்தியாசமான சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இந்த இயர்போன் எளிதில் கொண்டு செல்லும் வகையிலான டிசைன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் கேஸ் தோற்றத்தில் நோக்கியா 705 ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த இயர்போனின் மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரும் வாரங்களில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் போன் 1 சமீபத்தில் விற்பனைக்கு வந்தது.
    • இந்த மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றி அந்நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

    நத்திங் போன் 1 ஆண்ட்ராய்டு 13 அப்டேட் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போனில் உள்ள மென்பொருளை முதலில் சரி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து நத்திங் போன் 1 மாடலுக்கு அடுத்தடுத்து மென்பொருள் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது முதல் நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த செய்யும் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.


    "போன் 1 பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து கடினமான உழைப்பை கொடுத்து வருகிறோம். ஆண்ட்ராய்டு 13 -ஐ பொருத்தவரை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் நத்திங் போன் பயனர்கள், இதனை பெறுவர்."

    "புது அப்டேட் வெளியிடும் முன் நத்திங் ஹார்டுவேருக்கு இணையாக மென்பொருள் அனுபவத்தை வழங்க முடிவு செய்து இருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட நத்திங் ஓஎஸ் 1.1.3 அப்டேட்டில் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனில் ஏராளமான புது அம்சங்கள், பிழை திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் கேமரா மேம்படுத்தல் போன்றவற்றை வழங்கி இருக்கிறது. இந்த அப்டேட் 64.33 எம்பி அளவு கொண்டது ஆகும்.

    • நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன் விலையை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது.
    • முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறனை மேம்படுத்தும் அப்டேட் வெளியிடப்பட்டு இருந்தது.

    நத்திங் போன் 1 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 1000 உயர்த்தப்பட்டது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ரூபாய் மதிப்பில் மாற்றம் மற்றும் இதர காரணங்களால் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது என நத்திங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 1 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரண்ட் பேக் பேனல், க்ளிஃப் இண்டர்பேஸ், 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்லாம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.


    புதிய விலை விவரங்கள்:

    நத்திங் போன் 1 (8 ஜிபி ரேம், 128 ஜிபி) ரூ. 33 ஆயிரத்து 999

    நத்திங் போன் 1 (8 ஜிபி ரேம், 256 ஜிபி) ரூ. 36 ஆயிரத்து 999

    நத்திங் போன் 1 (12 ஜிபி ரேம், 256 ஜிபி) ரூ. 39 ஆயிரத்து 999

    புது அறிவிப்பின் படி நத்திங் போன் 1 மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அம்சங்கள்:

    நத்திங் போன் 1 மாடலில் 6.55 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ×