என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு தள்ளுபடி
- நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்தது.
- அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை இந்தியாவில் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இயர் (ஸ்டிக்) ட்ரூ வயர்லெஸ் இயர்போனை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ஆடியோ சாதனம் ஆகும். எனினும், நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. நத்திங் நிறுவன ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நவம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கும் லிமிடெட் சேலின் போது இந்த சலுகை தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே அரிவிக்கப்பட்டுளள்ளது. அந்த வகையில் ஓபன் சேல் துவங்கும் நவம்பர் 17 ஆம் தேதியில் இருந்து இந்த சலுகையை பெற முடியாது.
நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.